விஷுவல் பயோ டேட்டா!

மணிரத்னம் இயக்கும் "ராவணா' படத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆகியோரோடு விக்ரம் மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழில் வெகுவாக அறியப்பட்ட விக்ரமை ஹிந்தியிலும் முன்னணி நடிகர் அந்தஸ்தோடு அறிமுகப்படுத்த விரும்பினார் மணிரத்னம். இதற்காக, விக்ரமைப் பற்றிய சிறு பயோ டேட்டாவோடு "கந்தசாமி' படத்தின் முக்கியமான காட்சிகளையும் இணைத்து ஒரு மினி ட்ரெய்லர் உருவாக்கியிருக்கிறார்.

இதை ஹிந்திப் பதிப்பின் வியாபாரத்தின்போது பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் மணிரத்னம். இந்தப் படத்தில் கார்த்திக், நீண்ட இடைவெளிக்குப் பிறகு "மெüனராகம்' படத்தில் நடித்தது போன்ற ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails