மெலிவான உடல்வாகு பெற...

மெலிதான உடல்வாகு கொண்டவர்கள் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கு உடல் பருமனான நண்பர்களுடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும் என்று ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.

நாம் சாப்பிடும் உணவின் அளவைவிட, நம்முடன் சாப்பிடுபவர்களின் உடல் அளவு பெரிதாக இருப்பதுதான் முக்கியம் என்று அமெரிக்கா மற்றும் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

உடல் பருமனான நண்பருடன் சேர்ந்து சாப்பிடும் போது அவர் அதிகளவு சாப்பிட்டால், நாம் குறைந்த அளவே சாப்பிடுவோம். ஏனெனில் உடல் பருமனானவர், அவர் உடல்வாகுக்கு ஏற்றவாறு சாப்பிடுகிறார், நம் உடல்வாகுக்கு ஏற்றவாறு நாம் குறைவாக சாப்பிட்டால் போதும் என்ற எண்ணம் வரும்.

இதையே மெலிந்த உடல்வாகு கொண்ட நண்பருடன் சாப்பிடும்போது அவர் நிறைய சாப்பிட்டால் நாமும் நிறைய சாப்பிடுவோம். ஏனெனில் மெலிந்த உடல்வாகு கொண்ட அவரே அதிகமாக உண்ணும் போது நாம் ஏன் உண்ணக்கூடாது என்று எண்ணி, அதிகமாகச் சாப்பிடத் தோன்றும்.

அதனால் உடல் பருமனாகக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் 200க்கும் மேற்பட்ட மாணவர்களை இரண்டிரண்டு பேராக அமரவைத்து சாப்பிடச் செய்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails