1920-ல் துவங்கி காந்தி சுடப்பட்ட தினத்தோடு முடியும் "காஞ்சிவரம்' சினிமா, என் ஒன்பது வருஷ கனவு. பங்கெடுத்த அத்தனை பட விழாக்களிலும் காஞ்சிவரத்துக்கு கிடைத்த வரவேற்பு, கௌரவம் இதுவரை நான் செய்த படங்களுக்குக் கிடைக்கவில்லை.
இப்போது அதற்கு மணி மகுடமாக தேசிய விருதும் கிடைத்திருக்கிறது. கண்ணீர் துளிர்த்து நின்ற தருணங்களை மறக்க முடியாது என தேசிய விருது தந்த மகிழ்ச்சியில் பேசுகிறார் இயக்குநர் பிரியதர்ஷன்.
"காஞ்சிவரம்' எப்படி நடந்தது இது?
சினிமாவில் எனக்கான ஓர் அங்கீகாரத்தை பெற வேண்டும் என இயங்கத் தொடங்கியதில் இருந்தே இதன் கரு எனக்குள்ளே உருவாகியிருந்தது. ஆனால், மும்பை பர்சத் பிக்சர்ஸ் கம்பெனியின் மூலம்தான் பலிக்கணும்னு இருந்திருக்கு.
காஞ்சிபுரம் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்கினால் கூடைக் கூடையாய் அவ்வளவு செய்திகள். ஆயிரம் கோயில்கள் அங்கே இருந்திருக்கு.
இப்ப அதற்கான தடயங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. காஞ்சிபுரத்தின் அசல் மொழி எனக்குத் தெரியாது.
ஆனால், அதன் ஆன்மா புரியும். கார்ட்டூனிஸ்ட் மதன் அதற்கு பெரிதும் உதவினார். 1920-ல் இருந்த காஞ்சிபுரத்தைக் கண் முன்னால் உலவ விட்டார் சாபுசிரில். உலகம் புரிந்து கொள்ளாத பிரகாஷ்ராஜின் அபூர்வமான மறுபக்கம் பிரமிப்பாகப் பதிவாகியிருந்தது.
இதை ஆர்ட் பிலிம் என்று சொல்லி விட முடியாது. அர்த்தமுள்ள சினிமாங்கிற வார்த்தைதான் சரி
0 comments:
Post a Comment