பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, உலகிலேயே அதிக விலையுள்ள மொபைல் ஒன்றை ஆர்டரின் பேரில் தயாரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ.14 கோடியே 70 லட்சம்.
இது 22 காரட் தங்கத்தில் செய்யப்பட்டது. 200 வைரக் கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளன. போனின் முகப்பில் 136 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் இலச்சினை 53 வைரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் நேவிகேஷன் கீ அமைக்க 7.1 கேரட் வைரம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்ந்த மொபைல் போனை உருவாக்க பத்து மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை வைத்து எடுத்துச் செல்ல 7 கிலோ கிரானைட் கல்லில் ஒரு பெட்டி தயாரிக்கப்பட்டது.
உள்புறமாக, விலை உயர்ந்த தோலில் வேலைப்பாடுடன் கூடிய அமைப்பு உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.
ஐ போன் 3ஜி சுப்ரீம் என இது அழைக்கப்படுகிறது. இதன் உரிமையாளர் யார்? ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களில் ஒருவர்.
இவர் தன் பெயர் பிரபலமாவதை விரும்பாததால் தன்னைப்பற்றிய தகவல்களைத் தரவில்லை
0 comments:
Post a Comment