உங்களிடம் ஒரு TIFF பார்மட் பைல் உள்ளது. இதனை JPEG அல்லது BMP பார்மட்டில் பைலாக மாற்ற எண்ணினால் என்ன செய்திடலாம். முதலில் எந்த பார்மட்டில் உங்களிடம் பைல் இருந்தாலும் அதனை ஏதேனும் பிக்சர் எடிட்டர் புரோகிராமில் (எம்.எஸ். பெயிண்ட் / அடோப் போட்டோஷாப் போன்றவை) திறக்கவும்.
பின் File , மெனு திறந்து கிடைக்கும் மெனுவில் Save As என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பைல் சேவ் செய்யப்படும் இடத்தில் பைலின் பெயர் தரும் விண்டோவிற்குக் கீழாக பைல் பார்மட்டின் பெயர்கள் வரிசையாகக் கிடைக்கும்.
இதில் எந்த பார்மட்டில் சேவ் செய்திட விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திட கிளிக் செய்தால் புதிய பார்மட்டில் சேவ் செய்யப்படும். அநேகமாக அனைத்து பிக்சர் எடிட்டர்களும் இந்த வசதியைக் கொண்டிருக் கின்றன.
நீங்கள் பெரும்பாலும் கேள்விப்படாத புரோகிராம் ஒன்றினைச் சொல்லட்டுமா? இணைய தளத்தில் PIXresizerஎன்று ஒரு இலவச புரோகிராம் (முகவரி : http:// bluefive. pair.com/pixresizer.htm ) கிடைக்கிறது.
இதனை டவுண்லோட் செய்து இது போன்ற பிக்சர் பார்மட் மாற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். பார்மட் மாற்றம் மட்டுமின்றி படங்களின் அளவு களை மாற்றவும் இது உதவுகிறது. இவ்வாறு மாற்றப்படும் படங்கள் புதிய தனியான போல்டரில் பதியப்படுகின்றன.
ஒரிஜினல் படங்கள் அப்படியே மாற்றம் எதுவும் இல்லாமல் காக்கப்படுகின்றன. படங்களை இமெயிலில் அனுப்பும்போதும், இணைய தளத்தில் பதித்திட திட்டமிடுகையிலும் அவற்றின் அளவுகளை நாம் சுருக்க வேண்டியதிருக்கும். படங்களின் தன்மை கெடாமல் இவற்றைச் சுருக்க இந்த புரோகிராம் உதவுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஒரே மாதிரியான பார்மட் மாற்றம் மற்றும் அளவு மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவை அனைத்தையும் மொத்தமாக குரூப் செய்து ஒரே கட்டளையில் மாற்றுவதற்கும் இது உதவுகிறது.
அனைத்தையும் மாற்ற மற்ற பிக்சர் எடிட்டர் புரோகிராம்களைக் காட்டிலும் குறைவான நேரமே எடுத்துக் கொள்கிறது. இந்த புரோகிராமைப் பயன்படுத்த டெக்னிகல் விஷய ங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
எல்லாமே எளிதாக மேற்கொள்ளும் வகையில் இன்டர்பேஸ் கொடுக் கப் பட்டுள்ளது. புரோகிராமைப் பதிந்து இயக்க 2 எம்பி இடம் இருந்தால் போதும். டிஜிட்டல் போட்டோ கிராபர்களுக்கும் இணையதளத்தில் படங்களை அதிகம் பயன்படுத்துபவர் களுக் கும் இந்த புரோகிராம் மிகவும் பயன் உடையதாக இருக்கும்.
0 comments:
Post a Comment