ஆன்லைன் பேக் அப் சர்வீஸ்

அனைத்து வழிகளிலும் நமக்கு ஆபத்பாந்தவனாய் இயங்கும் இணையம் இதற்கும் நமக்கு உதவுகிறது. இணையத்தில் பல இடங்களில் நமக்கு ஆன்லைன் பேக் அப் சர்வீஸ் கிடைக்கிறது. சில தளங்கள் இணையத்தில் உள்ள சர்வர்களில் இலவசமாக இடம் தருகின்றனர்.

இதில் நாமாக பைல்களை சேவ் செய்திடலாம். வேறு சில அமைப்புகள் தானாக இயங் கும் சாப்ட்வேர் புரோகிராம்களைத் தருகின்றன. இந்த புரோகிராம்கள் நம் ஹார்ட் டிஸ்க் செயல்பாட்டை நாம் கம்ப்யூட் டர் இயக்குகையில் பின்னணியில் இருந்து கண்காணித்து வரும்.


நாம் பேக் அப் எடுப்பதற்காக மார்க் செய்திடும் போல்டர்களைக் கண்காணித்து அவற்றை பேக் அப் செய்து வைக்கும். எந்த ஒரு பைலில் நாம் ஒரு மாற்றத்தை மேற் கொண்டாலும் உடனே அதனை உணர்ந்து பேக் அப் பிற்காக எடுத்துக் கொள்கிறது.

ஏற்கனவே அந்த பைல் சேவ் செய்யப்பட்டிருந்தால் அதனை அப்டேட் செய்து கொள்கிறது. இந்த சர்வீஸ் வழங்கும் பெரும் பாலான அமைப்புகள் இலவச ஸ்டோரேஜ் ஹார்ட் டிஸ்க் இடத்தையும் வழங்குகின்றன. இது அதிகமாக வேண்டும் என் றால் சிறிது கட்டணம் செலுத் தியே பெற முடியும்.


இவ்வாறு இணையத்தில் நமக்குத் தரப்படும் விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க்கினை இன்டர் நெட் வழியாக எங்கிருந்தும் அணுக முடியும். நம் கம்ப் யூட்டரின் ஒரு கூடுதல் டிஸ்க் காக இவற்றை நாம் கருத முடியும். பைல்கள் தொலைந்து போனாலோ அல்லது சிஸ்டம் கிராஷ் ஆனாலோ இணையம் மூலமாக நாம் இந்த டிஸ்க்கை அடைய முடியும்.

இவை நாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் இன்னொரு டிஸ்க்காக செயல் பட்டு பைல்களை நமக்குத் தரும். பைல் தொலையும் பட்சத்தில் இல்லாமல் அடிக்கடி வெளியூர் செல்கிறீர்களா? அப்போது கூட இந்த சேவையினை நீங்கள் பயன்படுத்தலாம்.


ஏன் நாம் டிவிடி அல்லது பென் டிரைவில் காப்பிஎடுத்து வைக்கலாமே என்று ஒரு சிலர் எண்ணலாம். யார் சரியாகத் தினந்தோறும் இந்த வேலையைப் பார்ப்பார்கள். மேலும் ஆன்லைன் ஸ்டோரேஜ் கிடைக்கும்போது அது தொலையாது. கீழே விழாது; கெட்டுப் போகாது.


இன்னொரு சந்தேகம் நமக்கு எழலாம். இந்த பைல்கள் மற்றவர்களின் கண்ணில் படாமல் இருக்குமா என்பதுதான். நிச்சயமாய் இருக்கும். ஏனென்றால் நாம் இந்த விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க்குகளுக்கு பைல்களை அப்லோட் செய்கையில் அவை என்கிரிப்ட் செய்யப்பட்டே அனுப்பப்படுகின்றன.


இங்கே கிரெடிட் கார்ட் பயன்படுத்துகையில் நம் பாஸ்வேர்ட் மற்றும் எண்கள் எப்படி பாதுகாக்கப்படுகின்றனவோ அது போலவேதான் இங்கும் பாதுகாக்கப்படுகின்றன. இனி இந்த சேவை வழங்கும் சில தளங்களையும் அவை என்ன அடிப்படையில் வழங்குகின்றன என்பதனையும் பார்ப்போம்.


1. நீங்கள் இதுவரை ஆன் லைன் ஸ்டோரேஜ் வசதியினைப் பயன்படுத்தவில்லை என் றால் உங்களுக்கு உகந்தது டிராப் பாக்ஸ் என்னும் தளம் தான். ((Dropboks www.dropboks.com) இந்த சர்வீஸ் 1 ஜிபி இலவச ஸ்டோரேஜ் தருகிறது. மிக எளிமையானது. இந்த தளத்திற்கு சென்று Sign up என்ற இடத்தில் கிளிக் செய்வதன் மூலம் உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் பாஸ்வேர்ட் ஒன்றினை அமைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த இணைய தளத்தின் மெயின் பக்கத்திற்குச் செல்லுங்கள். அங்குள்ள பிரவுஸ் பட்டனில் கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு தனிப்பட்ட பைல் 50 எம்பி அளவிற்குள்ளாக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை அப்லோட் செய்திட அங்குள்ள சிறிய + அடையாளத்தின் மீது கீளிக் செய்து பைல்களை தேர்ந்தெடுக்கவும். பாதுகாப்பாக பேக் அப் செய்ய வேண்டிய பைல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் Upload Files என்ற பட்டனை அழுத்துங்கள்.

பைல்கள் அனைத்தும் அது எந்த வகையாய் இருந்தாலும் (டாகுமென்ட், ஜேபெக், வீடியோ போன்ற) அகர வரிசைப்படி அடுக்கப்படும். இவற்றை ஏதேனும் ஒரு போல்டரில் அமைக்க வேண்டும் என்றால் பைல் லிஸ்ட் கீழாக ரைட் கிளிக் செய்து போல்டரை உருவாக்கலாம்.

போல்டருக்குப் பெயர் கொடுக்க வேண்டும். இதனுள் பைல்களைப் போட அந்த பைல்களை கர்சரால் அழுத்தி இழுத்துவிட்டால் போதும். இவற்றை நீக்க வேண்டும் என்றாலும் இவற்றை இழுத்து ட்ரேஷ் ஐகானில் விட்டுவிடலாம்.


இந்த பைல்களை மீண்டும் பெற எந்த கம்ப்யூட்டரிலிருந் தும் இணைய இணைப்பு பெற்று இந்த தளம் சென்று உங்கள் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி உங்களுக்கான டிஸ்க் இடத்தைப் பார்க்கலாம். அதில் நீங்கள் பைல்களை எப்படி வைத்தீர்களோ அப்படியே இருக்கும்.


எந்த பைல் வேண்டுமோ அதன் மீது ரைட் கிளிக் செய்து பின் Download என்ற பட்டனை அழுத்துங்கள். பின் அதனை அந்தக் கம்ப்யூட்டரில் சேவ் செய்து பயன்படுத்தலாம். அல்லது டவுண்ட்லோட் செய்திடாமல் உங்கள் விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க்கில் வைத்தபடியே திறந்து பயன்படுத்தலாம்.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் தாமாக உங்கள் முயற்சி எதுவுமின்றி பேக் அப் எடுக்கப்பட வேண்டும் என் றால் கட்டணத்துடன் இந்த வசதியினைப் பெறலாம். மாதம் ரூ.350 கட்டணமாகச் செலுத்த வேண்டும். செலுத்துபவர்களுக்கு 50 ஜிபி இடம் தரப்படுகிறது.


எப்போது கடைசியாக பேக் அப் செய்தோம் என்ற கவலையே இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் நீங்கள் எப் போது இணைய இணைப்பில் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் இந்த தளம் தந்த ஆட்டோமேடிக் பேக் அப் புரோகிராம் இயங்கி உங்கள் பைல்களுக்கு பேக் அப் காப்பி எடுத்து வைக்கும்.


கார்பனைட் (Carbonite www.carbonite.com)என்னும் தளம் ஆட்டோமேடிக் பேக் அப் வசதியை வழங்குகிறது. எவ் வளவு வேண்டுமானாலும் எந்த அளவில் வேண்டுமானாலும் பைல்களை இதில் பேக் அப் எடுத்து வைக்கலாம். கட்டணம் ரூ.2,500. இதனுடைய ஆட்டோ பேக் அப் சாப்ட்வேர் மிகவும் எளிமையானதாக உள்ளது.

இதனை வாங்கிக் கொண் டால் கம்ப்யூட்டரில் உருவாக் கும் எந்த ஒரு பைலையும் ரைட் கிளிக் செய்தால் அந்த பைல் பேக் அப் எடுக்க வேண்டுமா என்ற ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இத்தகைய வாதி தரும் இன்னொரு தளம் டீனோ (Diino www.diino.com) இதுவும் இலவச பேக் அப் வசதியைத் தருகிறது.

இந்த தளம் தரும் சாப்ட் வேர் புரோகிராம் மூலம் எளிதாக பைல்களை பேக் அப் வசதிக்கு அனுப்ப முடிகிறது. நமக் கென ஒரு பெர்சனல் வெப்சைட் கிடைக்கிறது. எடுத்துக் காட்டாக அதன் பெயர்(http://yourusername.diinoweb.com) என இருக்கும்.

நீங்கள் பேக் அப் எடுக்கும் பைல்கள் இந்த தளத்தில் சேவ் செய்து வைக்கப்படும். ஒரு வேளை இந்த பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றால் அவர்களுக்கு இந்த இணைய முகவரியினையும் பாஸ்வேர்டினையும் தந்து பகிர்ந்து கொள்ள வழி வகுக்கலாம்.

ஆன்லைன் பேக் அப் வசதிகள் எப்போதும் நிம்மதியான, செலவற்ற பேக் அப் வழிகளைத் தருகிறது. கம்ப்யூட்டர் எப் போது கிராஷ் ஆகி நம் பைல்களுக்கு சமாதி கட்டும் எனத் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம். எனவே இறுமாப்புடன் இல்லாமல் இத்தகைய ஒரு இலவச வசதியைப் பயன்படுத்துவதே நல்லது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails