புளுடூத் (Bluetooth) பதிப்பு 3

புளுடூத் என்பது இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரு மக்கள் தொழில் நுட்பமாக மாறிவிட்டது. குறிப்பாக மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் வயர்லெஸ் இணைப்பில் தங்களிடம் உள்ள படங்கள் மற்றும் பாடல்களை அடுத்த போனுக்கு மாற்றிக் கொள்ள இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.


போன்களை வாங்கும் போதே இந்த தொழில் நுட்பம் உள்ளதா என்று கேட்டு வாங்குகின்றனர். இந்த தொழில் நுட்பமே மொபைல் போன்களில் வைரஸ் அனுப்புவதற்கும் வழி வகுக்கிறது என்பது இன்னொரு தீங்கான விஷயம் ஆகும்.

தற்போது இந்த தொழில் நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய வகை வெளியாக உள்ளது. தற்போது இருக்கும் தரப்படுத்தப்பட்ட புளுடூத் தொழில் நுட்பம்Bluetooth 2.0 ஆகும். அடுத்து வர இருப்பது Bluetooth 3.0. இதன் சிறப்பு இது பைல்களைப் பரிமாறும் வேகமாகத்தான் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மிகப் பெரிய பைல்களைக் கூட சில நொடிகளில் மாற்றிக் கொள்ளும் வகையில் இந்த தொழில் நுட்பம் செயல்படும். இதில் பயன்படுத்தப்படும் Generic Alternate MAC/PHY (AMP)தொழில் நுட்பத்தின் மூலம் வை–பி வேகத்தில் இதனைச் செயல்படுத்தும்.

இதன் மூலம் வை–பி பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரு சாதனங்களில் அதிவேக பைல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம். வை–பி வசதி ஒரு சாதனத்தில் மட்டும் இருந்தால் புளுடூத் அதனை ஈடு செய்து பைல் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails