வித்தியாசமான ஒரு புரோகிராம் (Unchrome)

அண்மையில் இணையத் தில் பிரவுஸ் செய்து கொண் டிருந்த போது வித்தியாசமான புரோகிராம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. அதன் பெயர்Unchrome. கூகுளின் குரோம் பிரவுசர் தொகுப்பினைப் பிடிக்காத யாரோ இதனை வடிவமைத்து வழங்கியது போல் முதலில் தோன்றியது.

ஆனால் இந்த தொகுப்பு செயல்படுவதற்கான காரணங்களைப் படித்த போது இதுவும் சரிதான் என்று எண்ணத் தோன்றியது.

கூகுள் தந்துள்ள குரோம் பிரவுசர் தற்போதைக்கு இயங்கும் பிரவுசர்களில் மிகவும் வேக மாக இயங்கும் பிரவுசர் தான். பல புதிய வசதிகளையும் இது தந்துள்ளது என்பதுவும் உண்மையே. ஆனால் இந்த பிரவுசர் நம்மைப் பற்றி பல பெர்சனல் தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது.

இதனை கூகுள் பாதுகாப்பாக பயன்படுத்துமா என்று சந்தேகம் வந்ததாலேயே இந்த புரோ கிராம் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரிய வருகிறது. கூகுள் அதன் வாடிக்கையாளர்களை அது தந்துள்ள அடையாள எண் மூலம் தான் யார் எனத் தெரிந்து கொள்கிறது.

இந்த புரோகிராமைப் பயன் படுத்துகையில் அந்த அடை யாள எண்ணை அழித்து விடு கிறது. இதனால் நம் பெர்சனல் தகவல்கள் கூகுள் நிறுவனத் திற்குக் கிடைக்காமல் போய் விடுகிறது என்று இதனை அமைத்தவர்கள் கூறுகின்றனர்.


உங்களுக்கும் இதே போன்று சந்தேகம் வந்து கூகுளில் உள்ள உங்கள் அடையாள எண்ணை நீக்க வேண்டும் என்றால் கீழ்க் காணும் முறையில் செயல்படவும்.


1. முதலில் குரோம் பிரவுசர் இயங்கிக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும். பின் வேறு ஒரு பிரவுசர் மூலம் http://www.abelssoft.net/unchrome.exe என்ற முகவரிக் குச் செல்லவும்.

2. இங்கு கிடைக்கும் UnChrome சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்திடவும். இதனை அப்படியே இயக் கலாம். அல்லது சேவ் செய்து வைக்கலாம்.

3. இயக்கத் தொடங்கினால் ஒரு ஸ்கிரீன் கிடைக்கும்.


4. பின் Remove Unique ID Nowஎன்ற இடத்தில் கிளிக் செய்திடவும். பின் ஓகே அழுத்தி வெளியேறவும். இதற்கு முன் குரோம் பிரவுசர் மூடப் பட்டிருக்க வேண்டும் என் பதனை நினைவில் கொள்க.

5. அடுத்து உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழ்க்காணும் காட்சி கிடைக்கும்.


6. இனி என்ன? குரோம் பிரவுசரை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால் அந்த பிரவுசரால் உங்களை அடையாளம் காண முடியாது. அவ்வளவே என்று இந்த அன்குரோம் தளத் தில் கூறப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails