திருட்டு சாப்ட்வேர்: களத்தில் இறங்குகிறது மைக்ரோசாப்ட்

கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிக்கும் வேளையில், திருட்டு நகல் சாப்ட்வேர் வரத்தும் பெருகி வருகிறது. இதனைத் தடுக்கும் வழிகளில் மைக்ரோசாப்ட் இந்தியா களத்தில் இறங்குகிறது.

ஏற்கனவே தன் விண்டோஸ் மற்றும் ஆபீஸ் தொகுப்புகளைத் தானாகவே சோதனை செய்து, அவை ஒரிஜினல் இல்லை என்றால் உடனே ஒரிஜினல் சாப்ட்வேர் தொகுப்புகளை வாங்கச் சொல்லி அறிவுறுத்தி வந்தது.

அத்தகைய சாப்ட்வேர் தொகுப்பு களுக்கு உதவியை நிறுத்தியது. தற்போது வாடிக்கையாளர்களையும் இணைத்தே இந்த தடுப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. சென்ற டிசம்பர் 3 அன்று நுகர்வோர் விழிப்புணர்வு தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகையில், இந்த நடவடிக்கை யினை மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.

தங்களை அறியாமலேயே, தாங்கள் செலுத்திய பணத்திற்கு முறையான லைசன்ஸ் இன்றி சாப்ட்வேர் தொகுப்புகளைக் கம்ப்யூட்டர்களுடன் பலர் பெறுகின்றனர். இதனால் மால்வேர் எனப்படும் தீங்கிழைக் கும் சாப்ட்வேர்கள் இந்த கம்ப்யூட்டர்களில் பரவி இயங்கத் தொடங்குகின்றன.

வாடிக்கையாளர்கள் இதனால் தொல்லைக்கு உள்ளாகின்றனர். தீங்கிழைக்கும் இந்த புரோகிராம்களால், அவர்களின் பெர்சனல் தகவல்கள் திருடப்பட்டுப் பிறரால் பயன்படுத்தப்படும் நிலை உருவாகிறது.

எனவே இது போன்ற திருட்டு நகல் சாப்ட்வேர்கள் தங்கள் கம்ப்யூட்டருடன் உள்ளது எனத் தெரியவந்தால், அந்த வாடிக்கையாளர்கள்www.microsoft.com/piracy என்ற இணைய தளத்தில் தங்கள் புகார்களைப் பதியலாம்.

அல்லது piracy@microsoft.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது அந்த தளத்தில் தரப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இதனை எப்படித் தெரிவிப்பது, எந்த விபரங்களைத் தர வேண்டும், போலி திருட்டு நகல் சாப்ட்வேர் எப்படி இருக்கும், என்பது போன்ற தகவல்களை அறிய விரும்பினால் http://www.micq�osob�t.com/howtotell என்ற முகவரியில் அவற்றைப் பெறலாம்.

சரி, நல்ல, உண்மையான சாப்ட்வேர் தொகுப்புகளை எங்கு வாங்குவது? என்ற கேள்வி எழுகிறதா?http://www.buyoriginalms.com என்ற இணைய தளத்திலிருந்து பெறலாம்.

மும்பை, புதுடில்லி மற்றும் லக்னோ நகரங்களில், காவல்துறை உதவியுடன், திருட்டு நகல் சாப்ட்வேர் சிடிக்களைப் பெரிய அளவில் கைப்பற்றி, விற்பனை செய்தவர்களையும், சிடிக்களைத் தயாரித்தவர்களையும் நீதிமன்றம் மூலமாக மைக்ரோசாப்ட் தண்டனை வாங்கித் தந்துள்ளது.

இந்த திட்டத்தினை மைக்ரோசாப்ட் அறிவித்த பின்னர், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் புகார்கள் மைக்ரோசாப்ட் நிறுவன தளத்தில் பதிவானதாக இந்த பிரிவின் துணைத்தலைவர் அறிவித்துள்ளார். சென்ற ஆண்டில் மட்டும் இந்தியாவில் போலி மென்பொருட்களால் இந்திய அரசுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

போலி சாப்ட்வேர் தயாரிப்பினைத் தடுத்தால், கூடுதலாக 44 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும், அதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 130 கோடி டாலர் அளவிற்கு உயரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அரசும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சிக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து வருகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails