எல்.ஜி.தரும் ஐ.டி.900 கிறிஸ்டல்

ஒளி ஊடுருவும் தன்மையுடன் கூடிய அழகான கீ பேட் கொண்டு தன் ஜி.டி. கிறிஸ்டல் மொபைல் போனை எல்.ஜி. நிறுவனம் வடிவமைத்துள்ளது. அண்மையில் இது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதனுடைய கிறிஸ்டல் டச் பேட் முதலில் எண் எழுத்துக்கள் கொண்ட கீ பேட் போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் அது போனைக் கண்ட்ரோல் செய்யக் கூடிய டச் பேட் போல விரிகிறது. லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள டச் பேட் போல செயல்படுகிறது.

ஹேண்ட்ரைட்டிங் பேட் போல இயங்குகிறது. இதன் மூலம் பல வகைகளில் டச் கமாண்ட் கொடுத்து இயக்கலாம். கூடுதலாக சைகை வழி கட்டளை (Gesture Command) 8 எம்பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா இணைக்கப் பட்டுள்ளது.

எம்பி3 பிளேயர் தரப்பட்டுள்ளது. வை–பி இணைப்பு, 3ஜி வசதி, 3 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன், டிவிடி ரெசல்யூசனில் வீடியோ ரெகார்டிங், 1.5 ஜிபி மெமரி, 16 ஜிபி வரை மெமரி யை நீட்டிக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.

சொகுசான வசதியைத் தரக்கூடிய ஒரு போனைத் தரத் திட்டமிட்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டலில் அழகான ஸ்லைடிங் கீபேட் தான் இதன் சிறப்பம்சம் என இந்நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் இதனை அறிமுகப்படுத்திய விழாவில் குறிப்பிட்டார்.

நடப்பு ஆண்டின் சிறந்த வடிவமைப்பிற்கான விருதை இந்த போன் பெறும் என்றும் இவர் கூறினார். குரோம் மற்றும் டைட்டன் வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ. 26,000.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails