பலவகையான யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களை வடிவமைத்து பன்னாட்டளவில் விற்பனை செய்திடும் கிங்ஸ்டன் நிறுவனம், அண்மையில் லாக்கருடன் கூடிய யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ரகசியமாகச் சுருக்கப்படும் வகையில் என்கிரிப்ஷன் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். மற்றும் அதிகக் கொள்ளளவில் டேட்டாவினை சேமித்து வைக்கலாம்.
நம் அனுமதியின்றி இந்த பிளாஷ் டிரைவினை மற்றவர்கள் பயன்படுத்துவதனைத் தடுப்பதுடன், பட்ஜெட்டில் இது போன்ற சாதனங்களை வாங்கிப் பயன்படுத்து வோருக்கான விலையில் இது கிடைக்கிறது என கிங்ஸ்டன் நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 முதல் விண்டோஸ் 2000 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இதனை இயக்க முடியும்.
மேக் கம்ப்யூட்டருடனும் இது இயங்கும். 256 பிட் அளவில் ஹார்ட்வேர் அடிப்படையில், பதியப்பட்ட தகவல்களை இதன் மூலம் சுருக்க முடியும். இந்த டிரைவினை, உரிமையாளர் அனுமதியின்றி எவரேனும் பயன்படுத்தி டேட்டாவினைப் படிக்க முயன்றால், பத்தாவது முயற்சியில், இதனுள்ளாக அமைந்த பாதுகாப்பு வழி டிரைவை லாக் செய்துவிடும்.
கூடுதலாக மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில் இடம் ஒதுக்கியும் இந்த டிரைவை இயக்கலாம்.
டேட்டா இழப்பு, திருட்டு ஆகியவற்றினால் ஏற்படும் சேதம் மதிப்பிட முடியாதது. எனவே தான் அந்த தொல்லையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழியாக, கிங்ஸ்டன் நிறுவனம் இந்த வகை டிரைவினை வடிவமைத்து வழங்கியுள்ளது.
இதனால் நம் மதிப்பு மிக்க டேட்டாவினைப் பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்ற நிம்மதியுடன் நாம் இருக்க முடியும்."2.58 x 0.71 x 0.4" என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரைவ் யு.எஸ்.பி. 2.0 வரைமுறைகளுக்கான வழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
இவை தண்ணீரினால் சேதமடையாத வகையில் வாட்டர் புரூப் தன்மை கொண்டது. இவை 4,8, 16 மற்றும் 32 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.1,250, ரூ.1,850, ரூ.4,850 மற்றும் ரூ.8,350 ஆகும்
0 comments:
Post a Comment