விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகள்

விண்டோஸ் 7 பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. பலரும் அதனை விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக புதிய கம்ப்யூட்டர் அனைத்திலும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம்தான் பதியப்பட்டு தரப்படுகிறது. இதோ நாம் வழங்கும் அதற்கான முதல் ஷார்ட் கட் கீ

பட்டியல்:

முதலில் விண்டோஸ் கீயுடன் உள்ள ஷார்ட் கட் கீகளைப் பார்க்கலாம்.

விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி அழுத்த விண்டோ மேக்ஸிமைஸ் செய்யப்படும்.

விண்டோஸ் கீ + கீ ழ் அம்புக் குறி –– விண்டோ மினிமைஸ் ஆகும்.

விண்டோஸ் கீ + இடது அம்புக் குறி –– விண்டோ இடது பக்கம் ஒதுக்கப்படும்.

விண்டோஸ் கீ +வலது அம்புக் குறி கீகளை அழுத்தினால் விண்டோ வலது பக்கம் ஒதுக்கப்படும்.

விண்டோஸ் கீ + ஹோம் கீ அழுத்த மற்ற விண்டோக்கள் அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும்.
மினிமைஸ் செய்யப்பட்டிருந்தால் மீண்டும் திறக்கப்படும்.

விண்டோஸ் கீ + ட்டி (T) அழுத்த டாஸ்க்பாரில் உள்ள முதல் பதிவு போகஸ் செய்யப்படும். தொடர்ந்து அழுத்தினால் அடுத்தடுத்த என்ட்ரிகள் தேர்ந்தெடுக்கப்படும்.

விண்டோஸ் கீ + ஸ்பேஸ் பார் அழுத்திப் பிடித்தபடி இருந்தால் விண்டோவின் தொடக்க நிலை காட்டப்படும்.

விண்டோஸ் கீ + ஏதேனும் ஒரு எண் (1–9) டாஸ்க் பாரில் அந்த எண் வரிசையில் உள்ள புரோகிராம் திறக்கப்படும்.

விண்டோஸ் கீ + ப்ளஸ் கீ அழுத்த விண்டோ ஸூம் செய்யப்படும்

விண்டோஸ் கீ + மைனஸ் கீ அழுத்த விண்டோஸ் ஸூம் குறைக்கப்பட்டு வழக்கமான நிலைக்கு மாறும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails