இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி

நமக்கு வந்த இமெயில்களை நாம் திறக்கையில் அதனை அனுப்பியவரின் யூசர் நேம், சப்ஜெக்ட், அதன் காப்பியைப் பெறுபவர் போன்ற தகவல்கள் நிச்சயம் இருக்கும்.


ஒரு சில இமெயில்களில் தான் அதனை அனுப்பியவரின் ஐ.பி. முகவரி, எந்த நெட்வொர்க்கிலிருந்து அனுப்பப்பட்டது, அதற்குப் பதில் இமெயில் அனுப்பினால் எந்த முகவரிக்கு போய்ச் சேரும்; அல்லது பதில் அனுப்பினால் அது பெறப்படாத மெயில் வகையா என்ற அனைத்துத் தகவல்களும் இருக்கும். சில நேரங்களில் யூசர் நேம் வித்தியாசமாக இருக்கும். அதனால் யார் அனுப்பியது என்றே தெரியாது.


அப்போது நாம் அனுப்பியவரின் ஐ.பி. முகவரியைக் கண்டறிந்தால் அதனை அனுப்பியவரின் முகவரியை நெருங்க முடியும். எப்படி இமெயில் அனுப்பியவரின் ஐ.பி. முகவரியைக் கண்டறிவது என்று பார்க்கலாம். யாஹூ, ஜிமெயில் மற்றும் ஹாட்மெயில்களில் இதற்கான செயல்முறைகளைப் பார்க்கலாம்



ஹாட்மெயில்: முதலில் உங்கள் ஹாட்மெயில் அக்கவுண்ட்டில் உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லவும். மேலாக உள்ள Mail டேப்பில் கிளிக் செய்திடவும். ஐ.பி.முகவரி பார்க்க வேண்டிய மெயிலைத் திறக்கவும்.


ஹெடர்ஸ் என்று மேலே சொல்லப்பட்ட அனைத்து தகவல்களும் தெரிகிறதா என்று பார்க்கவும். தெரியவில்லை என்றால் ஹெடர்கள் காட்டப்படாமல் செட் செய்யப்பட்டு உங்களுக்கு மெயில் அனுப்பப்பட்டது என்று பொருள். இப்போது ஹெடர்களைக் கண்டறிய வேண்டும்.



மேலே வலது மூலையில் உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும். Mail Options பக்கத்தில் Mail Display Settings என்பதில் கிளிக் செய்திடவும். Message ஹெடர்ஸ் என்பதில் Advanced option செக் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.


ஓகே கிளிக் செய்திடுக. மீண்டும் மெயில் சென்று சம்பந்தப்பட்ட மெயிலைத் திறக்கவும். அங்கு XOriginatingIP என்று தொடங்கி அதனுடன் ஒரு ஐ.பி. முகவரி இருக்கும். அதுதான் அனுப்பியவரின் ஐ.பி. முகவரி.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails