மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை பெருகப் பெருக அவர்களுக்கு எண்கள் ஒதுக்குவதில் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றன மொபைல் போன் சேவை நிறுவனங்கள்.
இப்பிரச்சனையைச் சமாளிக்க இதுவரை 10 இலக்க எண்களாக இருந்த மொபைல் எண்களை இனி 11 இலக்கத்துக்கு மாற்றப்போகிறார்களாம். இதுகுறித்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிராய் தீவிர ஆலோசனை செய்து வருகிறது.
இருப்பினும், இது தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் எவ்விதமான வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை என்றும் தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டில், கடந்த அக்டோபர் வரை, புதிதாக 1.70 கோடி பேர் மொபைல் போன் இணைப்பு பெற்றுள்ளனர். மொத்தம் 48 கோடி பேரிடம் மொபைல் போன் இணைப்புகள் உள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment