குரோம் ஓ.எஸ். குறித்து சுருக்கமாக

1. வெப் பிரவுசர் இங்கே டெஸ்க் டாப் கம்ப்யூட்டராகச் செயல்பட உள்ளது. எல்லாமே இணையதளத்துடன் கூடிய தொடர்பாகவே அமையும்.

2. வழக்கமான பைல், போல்டர், டிரைவ் எல்லாம் இருக்காது. எல்லாமே இணையத்தில் சேர்த்து வைக்கப்படும்.

3. குரோம் ஓ.எஸ். உள்ள கம்ப்யூட்டரில் ஷட் டவுண் பட்டன் இருக்காது. ஸ்லீப் மோடில் தான் இருக்கும். எனவே தொட்டவுடன் இயங்கத் தொடங்கி இணையத்தில் உங்களை அமர வைக்கும்.

4. கம்ப்யூட்டரில் எந்த சாப்ட்வேருக்கும் அப்டேட் தேவையில்லை. எல்லா அப்ளிகேஷனும் இணையத்திலிருந்தே நமக்குத் தரப்படுவதால், அப்போது தயாராக அப்டேட் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புதான் பயன்படுத்தக் கிடைக்கும்.

5. எதுவுமே கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்யப்படமாட்டாது. எனவே வைரஸ் தாக்கி கெடுக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமே இல்லை. அதிக பாதுகாப்பான, கவலையற்ற கம்ப்யூட்டிங் சுகம் கிடைக்கும்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails