இளைஞர்களைத் தொடர்ந்து ஈர்த்து வரும் வெர்ஜின் மொபைல் நிறுவனம், அண்மையில் தென்னிந்தியாவில் ஜி.எஸ்.எம். வகை மொபைல் சேவையினைத் தொடங்கியுள்ளது.
இந்த நெட்வொர்க்கில், வெர்ஜின் மொபைல் போன்களுக்கிடையே சென்னை, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு உள்ளாக மேற்கொள்ளப்படும் எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 20 பைசா கட்டண மாகும்.
வெர்ஜின் மொபைல் போனிலிருந்து வேறு நெட்வொர்க் அழைப்புகளுக்கு உள்ளூர் எனில் நிமிடத்திற்கு 40 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்பு எனில் 50 பைசாவும் கட்டணமாகும். இவை இரண்டுமே விநாடிக்கு ஒரு பைசா என்பதைக்காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கட்டணத்திற்குக் கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. தன் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து அழைப்புகள் சார்ந்த குறிப்பு களுடன் கட்டணத்திற்கான பில்லை வெர்ஜின் மொபைல் அனுப்புகிறது. பில்லில் கட்டணம் குறித்து ஏதேனும் பிரச்னை இருப்பின், அதனை 48 மணி நேரத்தில் தீர்த்து வைக்க உறுதி அளிக்கிறது.
அவ்வாறு தீர்க்கப்படாவிட்டால், அந்தக் கட்டணத்தை, வெர்ஜின் மொபைல் நிறுவனமே அளிக்கும். மேலும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு விருப்பமான எண்ணையே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தையும் இந்நிறுவனம் அளிக்கிறது. குறிப்பிட்ட எண்ணைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்துவது இல்லை.
தன் வர்த்தக விளம்பர தூதுவர்களாக அண்மையில் பாலிவுட் நடிகர்களான ரன்பீர் கபூர் மற்றும் ஜெனிலியா டிசௌசா ஆகியோரை நியமனம் செய்துள்ளது.
0 comments:
Post a Comment