கூகுள் ஷாப்பிங் டூல்

புதிது புதிதாய் ஏதாவது ஒரு வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது கூகுளின் சிறப்பாகும். அண்மையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, இணையத்தில் பொருட்களை வாங்குவதற்கான ஒரு எளிய டூலை தன் தளத்தில் வழங்கியுள்ளது.

இதன் மூலம் நீங்கள் வாங்க விரும்பும் பொருளின் விலையைப் பல விற்பனை மையங்கள் தரும் விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம். இந்த ஒப்பிட்டுக் காட்டும் வேலையைகூகுள் மேற்கொண்டு உங்களுக்கு வழங்குகிறது. அத்துடன் உங்கள் தேவை மற்றும் எதிர்பார்க்கும் விலையையும் இதில் வரையறை செய்திடலாம்.

இதுவரை இது போன்ற விலை ஒப்பிட்டுப் பார்த்துக் காட்டும் வசதி அமெரிக்க மற்றும் ஐரோப்பியாவின் சில நாடுகளில் மட்டுமே கூகுள் வழங்கி வந்தது. இதன் மூலம் வாங்க விரும்பும் பொருள்கள் குறித்த தகவல்களையும் விலைகளையும், ஏறத்தாழ 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட தளங்களிலிருந்து கூகுள் தருகிறது.

இந்த ஷாப்பிங் டூலைப் பயன்படுத்த கூகுளின் இந்திய தளமானhttp://www.google.co.in என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். பின் நீங்கள் வாங்கிட விரும்பும் பொருள் குறித்து தேடல் கட்டத்தில் சொற்களை அமைக்கவும்.

எடுத்துக்காட்டாக மொபைல் போன் ஒன்று வாங்க வேண்டும் என்றால் Mobile Phone என டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது தேடல் முடிவுகள் கிடைக்கும். இந்த தேடல் முடிவுகளுக்கு மேலாக 'Show Options ...' என்று ஒரு லிங்க் கிடைக்கும்.

இதில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் பக்கத்தில் 'Shopping' என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இதில் பல ஆப்ஷன்களை நாம் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக விலை எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை அமைக்கலாம். அமைத்துத் தேடினால், அந்த விலைக்குள் கிடைக்கும் பொருட்கள், முகவரி உட்பட தளங்களுக்கான லிங்க்குகள் கிடைக்கும்.

மிகப் பெரிய அளவில் இந்த விபரங்கள் கிடைப்பதால், நாம் பொறுமையாக அலசி ஆய்வு செய்து பொருட்களுக்கு ஆர்டர் செய்திடலாம். ஆனால் கூகுள் இந்த ஷாப்பிங் டூலினை மிகக் கஷ்டப்பட்டு தேடும் அளவில் வைக்காமல், எளிதாக அமைத்திருக்கலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails