டாடா டொகொமோ தினம் ஒரு திட்டம்

புதிய சந்தாதாரர்களை இணைப்பதில், தகவல் தொடர்பு பிரிவில் முதல் இடத்தில் இயங்கும் டாடா டொகொமோ, தங்களுடையை பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினம் ஒரு திட்டம் என்ற வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது 16 டெலிகாம் மண்டலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குறைக்கப்பட்ட கட்டணத்தில் நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசலாம். இந்த திட்டம் நடு இரவில் தொடங்கி ஒரு நாள் மட்டும் இயங்கும்.

இதனை உங்கள் மொபைல் போனிலேயே *141# என்ற எண்ணுக்கு டயல் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இதன்படி ரூ.5 செலுத்தினால் ஒரு டாட்டா போனிலிருந்து இன்னொரு டாட்டா போனுக்கு 30 நிமிட பேசும் நேரம் கிடைக்கும்.

ரூ10க்கு மற்ற நெட்வொர்க் போன்களுடன் 10 நிமிடம் பேசலாம். ரூ.12 செலுத்தி 30 நிமிடம் பேசலாம். ரூ.5 செலுத்தி 30 எம்பி அளவிற்கு பிரவுசிங் செய்திடலாம். ரூ.20 செலுத்தி 10 நிமிடம் கனடா அல்லது அமெரிக்க தொலைபேசிக்கு பேசலாம்.

ரூ.10 செலுத்தினால் 5 நிமிடம் பேசலாம். வளைகுடா நாடுகளுக்கு ரூ.20 செலுத்தி 3 நிமிடம் பேசலாம். இதே போல மியூசிக் மற்றும் கிரிக்கெட் சார்ந்தவற்றிற்கும் குறைந்த கட்டண தினச் சலுகை தரப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை அனுபவிக்கலாம். நம் போனிலேயே ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் என்பதால், கடைகளுக்கு செல்லும் நேரம் குறைகிறது. எந்த நேரத்திலும் இதனை நாம் திட்டமிட்டு அனுபவிக்கலாம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails