மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்க்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது.
சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது.
இதன் முகவரிhttp://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.
டி.என்.எஸ். ஹைஜாக்:
எண்களில் அமைந்துள்ள முகவரிகளை, நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களில் அமைக்கும் பணியினை டி.என்.எஸ். சர்வர்கள் மேற்கொள்கின்றன.
இந்த மாற்றத்தில் ஈடுபடுகையில் ஏதேனும் ஒரு மால்வேர் புரோகிராம், டி.என்.எஸ். சர்வர் தர இருப்பதனை ஹைஜாக் செய்து, தன்னுடைய மோசமான லிங்க்கைத் தரும் வேலை தற்போது நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதிலிருந்து தப்ப நாம் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. டி.என்.எஸ். சர்வர்களை இயக்குபவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.
மேலே சொன்னவை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய கம்ப்யூட்டர் சாதனங்கள் தரும் தீய விளைவுகளாகும். இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. எனவே கூடுதல் கண்காணிப்பும், மேலே பரிந்துரைக்கும் வழிகளுமே பாதுகாக்கும் கவசங்களாக இருக்கும்.
0 comments:
Post a Comment