இந்தியாவில் 3 ஜி எஸ் போன்கள்

இந்தியாவில் 3ஜி எஸ் மொபைல் போன்கள் விற்பனைக்கு வருகின்றன. போன் சேவைத் திட்டம் ஒன்றுடன் தான் இந்த போன் அறிமுகப்படுத்தப்படும். அந்த நெட்வொர்க்குடன் லாக் செய்யப்பட்டு இணைக்கப்படும். ஆனால் அந்த நெட்வொர்க் எது என்று தெரியவில்லை.

அநேகமாக பார்தி ஏர்டெல் நிறுவனமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் 4ஜி போன்கள் வர இருக்கும் இந்நாளில், இந்தியாவில் 3ஜி இன்னும் தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கவில்லை. எம்.டி.என்.எல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் மட்டுமே வழங்கி வருகின்றன.

இந்த வகையில் உள்ள கூகுள் நெக்ஸஸ் போன் கூட சில மாற்றங்களுடன்தான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் அறிமுகமான நெக்ஸஸ் அதே வசதிகளுடன் இங்கு அறிமுகப்படுத்தப்பட மாட்டாது. நெக்ஸஸ் போன் குறித்து இங்கே காணலாம்.

நெக்ஸஸ் போனில் தற்போது இருக்கும் அம்சங்கள் நம்மை அசத்துகின்றன. இதில் 3.7 அங்குல அMOஃஉஈ திரை 480து800 என்ற ரெசல்யூசனுடன் ஙிஙஎஅ டிஸ்பிளேயுடன் இருக்கும். 11.5மிமி தடிமனில் 130 கிராம் எடையில் கிடைக்கும். இதன் செயல் வேகம் 1 கிஹா ஹெர்ட்ஸ் என்று கூறப்படுகிறது.

இதில் கிடைக்கும் கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன், ஆட்டோ போகஸ் பிளாஷ் மற்றும் ஜியோ டேக்கிங் வசதியுடன் இருக்கும். 512 எம்பி நினைவகம் தரப்படும். 4ஜிபி மெமரி கார்டு தரப்படும். மெமரியை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.

லேசர் ஒளிக்கீற்று மூலம் போனின் பின்புறம் நம் பெயரை 50 கேரக்டர்களில் அமைத்துக் கொள்ளலாம். இதில் தரப்படும் எல்.இ.டி. விளக்கு நமக்கு மெயில்கள் வரும்போதும், சேட் அழைக்கப்படும்போதும், மெசேஜ் கிடைக்கும்போதும் ஒளிர்ந்து நம் கவனத்தை ஈர்க்கும்.

இதன் கூடுதல் சிறப்புகள் சிலவற்றையும் சொல்லியாக வேண்டும். இதில் டைப் செய்திடாமல் டெக்ஸ்ட்டை அமைக்கலாம். ஓசை, ஒலி மூலம் இதன் கீ போர்டை இயக்கலாம். டெக்ஸ்ட் மெசேஜை வாசிக்க வைக்கலாம்.

பேஸ்புக் அப்டேட் செய்திடலாம். இமெயில் மெசேஜை அமைக்கலாம். போனுக்கு பேசியே கட்டளைகளைக் கொடுத்து கூகுள் தளத்தில் தேடலாம். பேசவிரும்பும் நபர்களைக் கூப்பிட்டு அழைக்கலாம். போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சிகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. ஹை ரெசல்யூசனில் எம்பெக் 4 வீடியோ காட்சிகள் கிடைக்கின்றன.

இன்னொரு குறிப்பிட்ட வசதி என்னவென்றால், ஐபோன் போல இல்லாமல் இதனை எந்த நெட்வொர்க்குடன் லாக் செய்யாமல் வாங்கிடலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட வசதிகளில் எவை கட் செய்யப்பட்டு இங்கு கிடைக்கும் என்று இன்னும் தெரியவில்லை.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails