பயர்பாக்ஸ்: விரும்பும் புரோகிராமினைத் திறக்க

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் பைல் ஒன்றைத் திறக்க, அல்லது இமெயில் அனுப்ப லிங்க் ஒன்றைக் கிளிக் செய்கிறீர்கள். என்ன நடக்கிறது?

நீங்கள் எதிர்பார்த்த புரோகிராம், திறக்கப்படாமல் வேறு ஒரு புரோகிராமில் அது திறக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக, பாடல் பைல் ஒன்றை இயக்கிக் கேட்க விரும்புகிறீர்கள். அப்போது நீங்கள் விரும்பும் விண் ஆம்ப் இயக்கப்படாமல் விண்டோஸ் மீடியா பிளேயர் இயக்கப்படலாம்.

அதன் மூலமும் பாடலைக் கேட்கலாம் என்றாலும், நீங்கள் பழகிய புரோகிராமான விண் ஆம்ப் திறந்து கேட்பது தான் உங்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும்.

அதே போல நீங்கள் தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மூலம் உங்கள் இமெயில்களைக் கையாண்டு வருகிறீர்கள். ஆனால் லிங்க்கில் கிளிக் செய்கையில் முன்பு போட்டு வைத்த இடோரா இமெயில் கிளையண்ட் புரோகிராம் திறக்கப்படுகிறது.

நிச்சயம் நீங்கள் அதனை விரும்ப மாட்டீர்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது? நீங்கள் பயன்படுத்தும் பிரவுசரில், ஒவ்வொரு வகை பைலும் குறிப்பிட்ட புரோகிராமால் திறக்கப்பட வேண்டும் என நீங்கள் குறிப்பிடாவிட்டால், பிரவுசர் கம்ப்யூட்டரில் பதிந்துள்ளதைக் குறியிட்டு அமைத்துக் கொள்கிறது. எனவே நாம் இதனை எப்படி அமைக்க வேண்டும் என்பதை இங்கு பயர்பாக்ஸ் பிரவுசருக்குப் பார்க்கலாம்.

பயர்பாக்ஸ் 3.5 மற்றும் அடுத்த பதிப்புகளில் இந்த வகையில் மாற்றங்களை ஏற்படுத்தவும். முதலில்Tools>Options செல்லவும். பின்னர் 'Applications' என்ற டேப்பினைத் திறக்கவும். இங்கு நீங்கள் எந்த வகை பைலுக்கு புரோகிராம் செட் செய்திட விரும்புகிறீர்களோ, அந்த வகை பைலை, அங்கு ஸ்குரோல் செய்து தேடிக் காணவும்.

எடுத்துக் காட்டாக இமெயில் குறித்து என்றால் 'mailto' என்ற பிரிவிற்குச் செல்லவும். பின் கீழ் விரி மெனுவில் எந்த மெயில் புரோகிராம் வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே ஒவ்வொரு வகை பைலுக்கும் அதற்கான புரோகிரா மினைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் செட் செய்த புரோகிராம்களில் தான் அந்த அந்த வகை பைல்கள் திறக்கப்படும்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails