மைக்ரோமேக்ஸ் மொபைல் சி112

மைக்ரோமேக்ஸ் மற்றும் டாட்டா இண்டிகாம் நிறுவனங்கள் இணைந்து, மைக்ரோமேக்ஸ் மொபைல் சி112 மாடல் போனை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன.

இதன் விலை ரூ.1,699 எனக் குறியிடப்பட்டுள்ளது. இத்துடன் பிரீ பெய்ட் இணைப்பு ஒன்று தரப்படுகிறது. பேசுவதற்கு விநாடிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும். 200 இலவச நிமிடங்கள் தரப்படுகின்றன.

மே மாதம் வரை கெடு கொடுத்து ரீ சார்ஜ் செய்வதற்கு வவுச்சர்கள் ரூ.38க்குத் தரப்படுகின்றன. இதற்கும் 200 நிமிடங்கள் லோக்கல் கால் பேச அனுமதிக்கப்படுகிறது. மைக்ரோமேக்ஸ் சி112 போனில் எப்.எம். ரேடியோ, ஹிந்தி கீ பேட், மொபைல் ட்ரேக்கர் வசதி மற்றும் காலண்டர் தரப்பட்டுள்ளன.

எப்.எம். ரேடியோவில் 20 சானல்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட நேரத்தில் போன் மற்றும் ரேடியோவை இயக்கி, தேவையான பாடலை ரெகார்ட் செய்திடும் வசதியும் கிடைக்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails