இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குப் பதிலாக பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்கள்தான் உள்ளன என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா மற்றும் சபாரி ஆகிய ஐந்து பிரவுசர்கள் மட்டுமே உள்ளன போன்ற தோற்றம் நம்மில் பலரிடையே உள்ளது.
ஆனால் இன்டர்நெட் உலகில் இன்னும் பல பிரவுசர்கள், பிரபலமான பிரவுசர்களைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறப்பாக செயல்படும் வகையில் உள்ளன என்பதே உண்மை. அந்த வகையில் ஆறு பிரவுசர்களைத் தேர்ந்தெடுத்து நம் வாசகர்களுக்குத் தருகிறோம்.
1.அரோரா (Arora)
விண்டோஸ், மேக் ஓ.எஸ்., லினக்ஸ் மற்றும் ஹைக்கு ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக் கூடியது. இது ஒரு ஓப்பன் சோர்ஸ் புரோகிராம். பாப் அப் விளம்பரங்களைத் தடுப்பது, பிரைவேட் பிரவுசிங், அப்போதைய பிரவுசிங் தகவல்களைக் கையாள்வது மற்றும் ஒரு பிரவுசருக்குண்டான பல அடிப்படை வசதிகளைக் கொண்டது.
குரோம் இயங்கும் அதே தொழில் நுட்பத்தினையே இந்த பிரவுசரும் பயன்படுத்துகிறது. கூகுள் தொடர்பே வேண்டாம் என்பவர்களுக்கு இது ஒரு மாற்று பிரவுசராகும். சென்ற ஏப்ரலில் அப்டேட் செய்யப்பட்டது. இதன் பைல் சைஸ் 10.2 எம்.பி. இலவசம். இணைய தள முகவரி: http://code.google.com/p/arora/downloads/list
2.கேமினோ (Camino):
மேக் ஓ.எஸ். சிஸ்டத்தில் மட்டும் இயங்கும் பிரவுசர். ஜெக்கோ தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. மேக் பிளாட்பாரத்தில் இயங்கும் அனைத்து பிரவுசர்களுக்கும் இது ஒரு மாற்றாகும். எளிமையான, மிகச் சிறிய அளவில் இடம் பிடித்து இயங்கும் பிரவுசர். நாம் எதிர்பார்க்கும் வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன. கிடைக்கும் தள முகவரி : http://caminobrowser. org/download/
3. பிளாக் (Flock):
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும். பேஸ்புக், ட்விட்டர், மை ஸ்பேஸ், யு–ட்யூப், ப்ளிக்கர், பிளாக்கர், ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் போன்றவற்றிற்கு நேரடி இணைப்பு தருகிறது. இது பயர்பாக்ஸ் பிரவுசர் அடிப்படையில் இயங்குகிறது.
எனவே பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தியவர்கள் இதனை எளிதாகப் பயன்படுத்தலாம். பயர்பாக்ஸ் போல பாதுகாப்பான பிரவுசிங் அனுபவத்தினைத் தருகிறது. போட்டோ ஷேரிங், அப்டேட் நியூஸ், தேடல் இஞ்சின் ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் பைல் அளவு 12.8 எம்.பி. கிடைக்கும் தள முகவரி:http://www.flock.com
4. கே–மெலான் (KMeleon):
விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டும் இயங்கும். இது ஒரு ஓப்பன் சோர்ஸ் பிரவுசர். இதனை நம் விருப்பத்திற்கேற்றபடி செட் செய்திடலாம். மிகவும் வேகமாக தளங்களைப் பெற்றுத் தருகிறது. ஜெக்கோ தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது. ஆங்கிலம் உட்பட ஆறு ஐரோப்பிய மற்றும் ரஷ்ய மொழிகளில் இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இதன் பைல் அளவு 5.8 எம்.பி. மட்டுமே. கிடைக்கும் இணைய தளம்: http://kmeleon.sourceforge.net/
5. மேக்ஸ்தான் (Maxthon):
இது விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. சீனாவில் இது மிகவும் பிரபலமான பிரவுசராகும். இலவசமாய்க் கிடைக்கும் இந்த பிரவுசரின் பைல் அளவு 6.4 எம்.பி. இதன் டேப் வசதி பிரவுசிங் மிக வேகமாக இயங்குகிறது. ஒரு பிரவுசருக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் இதில் உள்ளன. கிடைக்கும் தள முகவரி: http://www.maxthon.com /download.htm
6. பேல் மூன் (Pale Moon):
விண்டோஸ் இயக்கத்தில் செயல்படுகிறது. ஜெக்கோ இஞ்சினில் இயங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. வழக்கமான பிரவுசரைக் காட்டிலும் 25% கூடுதல் வேகம் உடையது என்று இந்நிறுவன அறிக்கை கூறுகிறது. கிடைக்கும் தள முகவரி : :http://www.palemoon.org/
இந்த பிரவுசர் முழுக்க பயர்பாக்ஸ் கட்டமைப்பைக் கொண்டு, கூடுதல் வேகத்தில் இயங்குகிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன்ஸ், தீம்ஸ் மற்றும் பெர்சனாஸ் இந்த பிரவுசரிலும் இயங்கும். இதன் பைல் அளவு 7.7 எம்பி.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் உட்பட பல பிரபலமான பிரவுசர்கள், இன்று பலவிதமான வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் இது போன்ற அதிக பிரபலமில்லாத சில பிரவுசர்களையும் டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கலாம். வைரஸ்கள் தாக்கும் வழிகள் குறைவாகத்தான் இருக்கும்.
0 comments:
Post a Comment