கரப்ட் ஆன வேர்ட் பைல்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க முயற்சிக்கிறீர்கள். அப்போது அந்த டாகுமெண்ட் பைல் கரப்ட் ஆகிக் கெட்டுப் போய்விட்டதாகவும், அதனைத் திறக்க முடியாதெனவும் ஒரு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது.

நிச்சயமாக கம்ப்யூட்டரில் வேர்ட் பயன்படுத்துபவர் அனைவருக்கும் இந்த எர்ரர் செய்தியினை நிச்சயம் சந்தித்திருப்பார்கள்.

இதை அப்படியே விட்டுவிட முடியுமா? கெட்டுப் போனதை எப்படி சரி செய்வது?

உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ப, பைல் மெனு சென்று ஓப்பன் பிரிவு அல்லது ஆபீஸ் பட்டன் அழுத்தி ஓப்பன் பிரிவு தேர்ந்தெடுத்து அழுத்தவும். இப்போது கரப்ட் பைல் எந்த டைரக்டரி அல்லது போல்டரில் உள்ளதோ, அங்கு சென்று அந்த பைலின் பெயரில் சிங்கிள் கிளிக் செய்து, ஓப்பன் விண்டோவில் கீழாக வலது பக்கம் பார்க்கவும்.

அங்கு Open என்ற இடத்தில் சிறிய கீழ் நோக்கிய அம்புக்குறி இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் கிடைக்கும் சிறிய மெனுவில் Open and Repairஎன்று ஒரு பிரிவினைக் காணலாம். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது பைல் சரி செய்யப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கை எதிர்பார்த்த விளைவினைத் தரவில்லை என்றால் மீண்டும் Open Dialogue Box ஆணிது செல்லவும். கரப்ட் ஆன பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Files of type என்ற இடத்தில் கீழ் விரி அம்புக் குறியினைத் திறந்து கிடைக்கும் மெனுவில் 'Recover text from any file'என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நிச்சயம் உங்கள் பைலில் உள்ள டெக்ஸ்ட்டாவது உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இதில் ஏற்கனவே நீங்கள் ஏற்படுத்திய பார்மட்டிங் சமாச்சாரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, டெக்ஸ்ட் மட்டுமே கிடைக்கும். ஒன்றுமே இல்லாததற்கு இது பரவாயில்லை அல்லவா!.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails