25000 கார்களை திரும்பப் பெறுகிறது நிஸ்ஸான்

மேலும் 25000 கார்களை திரும்பப் பெறுகிறது நிஸ்ஸான் கார் தயாரிப்பு நிறுவனம். இவை அனைத்தும் ஜப்பானில் விற்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கார்களின் அக்ஸலரேட்டர் பெடல் சரியாக இல்லாததால் தொடர்ந்து புகார்கள் வருவதைத் தொடர்ந்து இந்த திரும்பப் பெறும் முடிவை அறிவித்துள்ளது நிஸ்ஸான்.

ஏற்கெனவே 540000 கார்களைத் திரும்பப் பெற்று பழுது நீக்கும் பணியில் இறங்கியுள்ளது நிஸ்ஸான்.

இந்த கார்களில் அக்ஸலரேட்டர் பெடல் பிரச்சினை, கேஸ் மூடி பிரச்சினை, எரிபொருள் கசிவு பிரச்சினை போன்றவற்றால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் விற்கப்பட்ட கார்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.


செபைரோ, சன்னி, ப்ளூபர்ட், பிரிமிரா மற்றும் டினோ ஆகிய மாடல்களைச் சேர்ந்த கார்களில்தான் இந்த பிரச்சினைகள் அதிகம் உள்ளதாக நிஸ்ஸான் அறிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails