சைலண்ட் மோடில் மொபைல் விற்பனை

ஆண்டுக்கு ரூ.60,000 கோடி அளவிற்கு விற்ப னையாகும் இந்திய மொø பல் விற்பனைச் சந்தையில், சென்ற 2009 ஆம் ஆண்டு விற்பனை, முந்தைய ஆண்டு விற்பனையிலிருந்து அதிகமான அளவில் முன்னேற்றத்தினைக் காட்டவில்லை.

2008 ஆம் ஆண்டில் 9 கோடியே 46 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையான நிலையில், 2009ல் ஜஸ்ட் 7.2% மட்டுமே கூடுதலாக 10 கோடியே 15 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. முதல் ஆறு மாதங்களில் விறுவிறுப்பாக 10 கோடியே 9 லட்சம் போன்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த ஆறு மாதங்களில் விற்பனை மிகவும் டல்லடித்தது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால், சென்ற அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில், 28 புதிய மொபைல் விற்பனை நிறுவனங்கள் இந்த சந்தையில் புகுந்தன. பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் போன்களின் வெளி வடிவமைப்பைப் போல போன்களைத் தயார் செய்து வெளியிட்ட , சிறிய நிறுவனங்களின் மொபைல் போன்கள் இந்த சந்தையில் 12.3% பங்கினைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனங்கள் தயாரித்த போன்களின் விலை, பெரிய நிறுவனங்களின் போன்களுக்கான சராசரி விற்பனை விலையில், பத்தில் ஒன்று என்ற அளவிலேயே விலையிட்டு விற்பனை செய்யப்பட்டன. புதிய பெரிய ஐந்து நிறுவனங்கள் 0.5% பங்கினை மட்டுமே மேற்கொள்ள முடிந்தது.

புதிய மற்றும் சிறிய நிறுவனங்கள் இந்த சந்தையில் சென்ற ஆண்டில் அதிக எண்ணிக்கையில் நுழைந்தாலும், நோக்கியா தொடர்ந்து முதல் இடத்தையே கொண்டுள்ளது. சந்தையில் நோக்கியாவின் பங்கு 54.1%. அடுத்த இடத்தில் சாம்சங் (9.7%) மற்றும் எல்.ஜி.(6.4%) நிறுவனங்கள் இருந்தன.

மெட்ரோ நகரங்கள் தவிர மற்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், மொபைல் சேவை நிறுவனங்கள் தீவிரமாகத் தங்கள் பணியை விரிவாக்கம் செய்ததால், சிறிய நிறுவனப் போன்களின் விற்பனை சென்ற ஆண்டின் பிற்பகுதியில் அதிகமாக இருந்தது.

அத்துடன் அடையாள எண் இல்லாத சீன மொபைல் போன் விற்பனைக்கு அரசு விதித்த தடையும், இந்த சிறிய நிறுவனங்களின், விலை குறைந்த போன்களின் விற்பனைக்கு உரமாக இருந்தது. தற்போது இந்திய மொபைல் சந்தையில் மொபைல் போன் ஒன்றின் சராசரி விலை ரூ.2,500 ஆக உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails