இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் மெட்ரோ (எஸ்5350) விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது ஒரு நடுத்தர நிலையில் விலையிடப்பட்டுள்ள போன்.
இந்த போன் தரும் வசதிகளுக்காக, இளைஞர்கள் அதிகம் விரும்புவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் ரசனைக்கேற்ப பல இன்ஸ்டன்ட் மெசஞ்சர் தொகுப்புகள் இதில் இயங்கும் வகையில் உள்ளன.
அத்துடன் பல சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு நேரடியான விட்ஜெட் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. எனவே நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உடனடித் தொடர்புகொள்ள விரும்புபவர்களுக்கு இது உகந்த போனாக இருக்கும். மெட்டலிக் மேல் பூச்சுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் கூகுள் அப்ளிகேஷன்கள் அனைத்திற்கும் தொடர்பு கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது. பிளிக்கர் மற்றும் பிகாஸா தளங்களுக்கான தொடர்பும் அப்படியே உள்ளது. ஒன்பது வட்டார மொழிகளை இது ஏற்றுக் கொள்கிறது.
உள்நினைவகம் 256 எம்பி, 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதியுடன் எஸ்.டி. மெமரி கார்ட் கிடைக்கிறது. 3.2 எம்பி திறனுடன் கூடிய கேமரா ஸ்மைல் ஷாட் மற்றும் பனோரமா ஷாட்களுக்கான வசதிகளுடன் தரப்பட்டுள்ளது.
இதில் உள்ள 3ஜி தொடர்பு மூலம் இன்னும் பல வசதிகளை அனுபவிக்கலாம். கூகுள் அப்ளிகேஷன்கள் பல தரப்பட்டுள்ளதால், டெக்ஸ்ட் டாகுமெண்ட்களைத் திறந்து படிக்கலாம். மேலும் மொபைல் ட்ரேக்கர் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8,250 எனக் கூறப்பட்டுள்ளது. வரும் காலத்தில் இன்னும் குறைவாகக் கிடைக்கலாம்.
0 comments:
Post a Comment