ஒவ்வொரு பஞ்சாயத்து எல்லைக்கும், பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை நீட்டிக்க, இந்தியா முழுவதும் ஐந்து லட்சம் கி.மீ. தூரத்திற்கான பைபர் ஆப்டிக் கேபிள்களை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
இந்த பணியினை மேற்பார்வையிட்டு முடுக்கிவிட அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அரசு அமைத்துள்ளது. இந்த கட்டமைப்பை உருவாக்க, பி.எஸ்.என்.எல். நிறுவன அலுவலர்கள் சிலரைத் தனி நிறுவனக் குழுவாக அமைக்கிறது அரசு. இந்த குழு ரெயில்டெல், பவர் கிரிட் கார்ப்பரேஷன் போன்றவற்றுடன் இணைந்து செயல்படும்.
தொலை தொடர்பு துறை, மனித வளத்துறை, கிராமப்புற மேம்பாட்டுத் துறை, பொருளாதார அலுவல் துறை, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை ஆகியவற்றிலிருந்து அலுவலர்கள் இந்த பணிக்கு பயன்படுத்தப்பட எடுக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்.
அனைத்து கிராமங்களுக்கும், முடிந்தவரை சிறப்பான பிராட்பேண்ட் இணைப்பினை வழங்குவது இந்த பிரிவின் பிரதான இலக்காக இருக்கும்.
இந்த முயற்சியில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் பங்கீடு இருக்குமா என்பது இன்னும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அப்படி இல்லாத பட்சத்தில் அது ஒரு குறையாக இருக்கும். அடுத்ததாக, இன்டர்நெட் இணைப்பு பணியில் இப்போது வயர்லெஸ் இன்டர்நெட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வேகமாகவும், மலிவான செலவிலும் இன்டர்நெட் இணைப்பினைத் தர வயர்லெஸ் இணைப்பு தான் சிறந்ததாகக் கருதப்படுகிறது. 3ஜி தொழில் நுட்பம் விரைவில் வர இருக்கும் நிலையில், வயர்லெஸ் இணைப்பினையும் சமமாகக் கருதுவதும், இந்த பிரிவில் நல்ல கட்டமைப்பினை உருவாக்கி உள்ள தனியார் நிறுவனங் களின் ஒத்துழைப்பினை நாடுவதும், அரசின் இலக்குகளை விரைவில் அடைய உதவியாய் இருக்கும்.
1 comments:
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
Post a Comment