ஆப்பிரிக்காவின் மை-போன் இந்தியாவில் விற்பனை

ஆப்பிரிக்க நிறுவனமான மை–போன் நிறுவனம்(MiFone) இந்திய மொபைல் மார்க்கட்டில் நுழைந்துள்ளது. முதல் கட்டமாகத் தன் நான்கு போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

MiQ என இந்த வரிசை அழைக்கப்படுகிறது. Mi5QS, Mi338, Mi2010, Mi323 மற்றும்Mi350a என இந்த போன் மாடல்கள் அழைக்கப்படுகின்றன. இந்த போன்கள் அனைத்தும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட போன்களாகும்.

இந்த போன்களில் முழு வண்ணத்திரை, எப்.எம். ரேடியோ மற்றும் குவெர்ட்டி கீ போர்டு ஆகிய வசதிகள் குறிப்பிடத்தக் கவையாகும். இவற்றை அடுத்து வர இருக்கும் இந்த வரிசை மாடல்களில் 'MIAPPS' என்ற அப்ளிகேஷன் தரப்படும்.

இதன் மூலம் ஓரளவிற்கு பிளாக்பெரி போன்களில் கிடைக்கும் வசதி தரப்படும். புஷ் மெயில் மற்றும் மெசஞ்சர் வசதிகளும் கிடைக்கும். இந்த போன்களின் விலை ரூ.4,999 ல் தொடங்குகிறது.

Mi338 எல்.சி.டி. டச் ஸ்கிரீன், இரண்டு சிம்,அனலாக் டிவி, எம்.பி. 3 பிளேயர், வீடியோ மற்றும் மல்ட்டி மீடியா வசதிகள், எஸ்.எம்.எஸ்., ஜி.பி.ஆர்.எஸ்., வாப், ஷேக் சென்சார் (shake sensor) ஆகியவை உள்ளன. விலை ரூ.6,990.

Mi2010 இது ஒரு குறைந்த விலை போன். இரண்டு சிம், 1.8 அங்குல வண்ணத்திரை, ஜி.பி.ஆர்.எஸ்., வாப், எம்.எம்.எஸ்., எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. விலை ரூ. 2,999.

Mi323 – இந்த போனில் GRPS, WAP, MMS,, புளுடூத், கேமரா, எம்பி3 பிளேயர், 2ஜிபி மெமரி கார்ட் உள்ளன. விலை ரூ. 3,990.

Mi350a – டூயல் சிம், விஜிஏ கேமரா, டூயல் பேட்டரி பவர், ஜி.எஸ்.எம். சிக்னல்களைச் சிறப்பாகப்
பெற ஜி.எஸ்.எம். ஆன்டென்னா ஆகியவற்றை இந்த போன் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 3,999.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails