Unmovable Files என்றால் என்ன?

இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன.

பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை iஇடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

பிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும் இதனையே பேஜ் பைல் / ஸ்வொப் பைல் (Swap file) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது

அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.

இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.

ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும்.

இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம் அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம்.

ஹாட் டிஸ்கை ஒரு குறித்த் கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter எனும் யூட்டிலிட்டி விண்டோஸுடன் இணைந்து வருகிறது.

டிப்ரேக்மண்ட் செய்யும்போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ண்ம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

டிப்ரேக்மண்ட் செய்யும்போது, டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில்
சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத் பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படுகிறது.. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகும் இந்த அன்மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாகக் இருக்கும்.

பேஜ் பைல் அலல்து ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்குப் விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.

Control Panel System Advanced tab Performance Settings Advanced tab Change தெரிவு செய்யுங்கள். அங்கு Virtual Memory என்பதன் கீழ் No paging file தெரிவு செய்து Set என்பதைக் க்ளிக் செய்யுங்கள். பின்னர் கணினியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.

டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட் டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது, கணினியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஹாட் டிஸ்கிலுள்ள் மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத் பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும்.. ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும்போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த MFT பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.

ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றததைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள் இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start → Run → regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Control\Filesystem வரை பயணித்து NtfsMftZoneReservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலது புறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள்.

இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3 ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்ளீடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.

கூகுள் தரும் புதிய வசதிகள்

கூகுள் மெயில் அண்மைக் காலமாக சில புதிய வசதிகளைத் தந்துள்ளது. இவற்றை ஒரு சிலரே கவனித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.


பலருக்கு இது போன்று வசதிகள் உள்ளன என்று தெரிய வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர். சிலர் பயன்படுத்தி வந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள இந்த வசதிகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.



* வண்ண லேபிள்கள் (Colored labels) :இந்த வண்ண லேபிள்கள் மூலம் உங்களுக்கான இமெயில்களை வகைப் படுத்த வசதியாக இருக்கும். ஒவ்வொரு லேபிள் பக்கத்தில் இருக்கும் கலர் பட்டி மீது கிளிக் செய்து ஒவ்வொரு மெயிலுக்கும் வண்ண லேபிள்களைக் கொடுங்கள்.



* குரூப் சாட்டிங் (Group chat) : சாட்டிங் எனப்படும் அரட்டையில் பலருடன் பேச வேண்டும் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு விண்டோவினைத் திறந்து பேச வேண்டும். இப்போது இந்த சிரமம் களையப்பட்டு ஒரே விண்டோவில் அனைவருடன் பேசும் வசதி தரப்படுகிறது. இது போன்ற ஒரு குரூப் சேட்டிங் தொடங்க சாட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஆப்ஷன்ஸ் மெனுவிலிருந்து குரூப் சேட் என்பதனை கிளிக் செய்திடவும். அடுத்தடுத்து வருபவை எல்லாம் ஒரே விண்டோவில் கிடைக்கும்.



* புதிய எமோட்டிகான்கள் (emoticons) : உங்கள் உணர்வுகளை நகைச்சுவையுடன் வெளிப்படுத்த பல புதிய எமோட்டிகான்கள் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்துங்கள். வழக்கமான செமி கோலன் மற்றும் பிராக்கெட் மட்டுமே வைத்து அமைத்திடும் எமோட்டிகான்களிடமிருந்து விடுதலை பெறுங்கள்.



* இலவச ஐ–மேப் வசதி (Free IMAP) : இதன் மூலம் உங்கள் இன் – பாக்ஸில் என்ன மாற்றங்கள் ஏற்படுத்தினாலும் அது நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைகிறது. மொபைல் போன் வழியே இன் – பாக்ஸ் பார்த்தாலும் டெஸ்க் டாப் வழி யேபார்த்தாலும் இந்த மாற்றங்கள் காட்டப்படுகின்றன.



* மற்ற அக்கவுண்ட் இமெயில்கள்: உங்களுக்கு உள்ள வேறு இமெயில் அக்கவுண்ட்டுகளுக்கு வரும் இமெயில் கடிதங்களை கூகுள் மெயிலில் இருந்தே பெற்றுப் பார்க்கலாம். இது போல ஐந்து வேறு வேறு இமெயில் அக்கவுண்ட்களைப் பார்க்க கூகுள் மெயில் அனுமதிக்கிறது.



அவை அனைத்தும் கூகுள் மெயில் அக்கவுண்ட்டிலேயே வைத்துக் கொள்ளவும் செய்கிறது. இவற்றிற்குப் பதிலளிக்க வேண்டுமாயின் அதற்கெனவே தனி ‘from’ address வடிவமைத்துத் தருகிறது. இதனால் பதில் கூகுள் தளத்திலிருந்து வருகிறது என்று அதனைப் பெறுபவர்களுக்குத் தெரியாது. ஆனால் வேறு இமெயில் அக்கவுண்ட்டுகள் அதிலிருந்து உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட அக்கவுண்ட்டாக இருக்க வேண்டும். வெப் சர்வரிலேயே வைத்துப் பார்க்கும்படியானதாக இருக்கக் கூடாது

எல்.ஜி. தரும் புதிய மல்ட்டி மீடியா மொபைல்

கேண்டிபார் வடிவில் குறைவான விலையில் மல்ட்டி மீடியா மொபைல் போன் ஒன்றை அண்மையில் எல்.ஜி. நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

எல்.ஜி. கேஜி 195 என்ற இந்த போன், ஓரங்களில் சரியான சதுர முனைகளைக் கொண்டு பார்க்கும்போதே வித்தியாசமான மொபைலாகத் தோற்றமளிக்கிறது. 1.8 அங்குல திரை, 128 x160ரெசல்யூசனுடன் காட்சி தருகிறது.

கேமரா பட்டனுக்கு மேலாக மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், அதற்கும் மேலாக கனெக்டர் ஸ்லாட் ஆகியவை உள்ளன. மற்றொரு பக்கம் வால்யூம்/ஸூம் கீகள் தரப்பட்டுள்ளன. பின்பக்கம் எக்ஸ்டெர்னல் ஸ்பீக்கரும் கேமராவும் அமைக்கப்பட்டுள்ளன.

கருப்பு பேக் ஷெல் நீல நிற ஹைலைட்ஸ் கொண்டு அழகாகக் காட்சி தருகிறது. இதன் கீ பேட் பெரிதாக அகலாமாக அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் பிளாஸ்டிக் பாக்ஸ் பயன்பாட்டிற்குச் சற்று சிரமத்தினை அளிக்கிறது. பின்புற பேனலை இன்னும் சற்று இறுக்கமாக அமைத்திருக்கலாம்.

இதன் மியூசிக் பிளேயரிலிருந்து வரும் ஒலி ரம்மியமாக அழகு சேர்க்கிறது. எப்.எம். ரேடியோவில் நேரம் அமைத்து பாடல்களைப் பதியலாம். வாய்ஸ் ரெகார்டர் மற்றும் வீடீயோ பிளேயர் சிறப்பாக இயங்குகின்றன.

விலை குறைவாக இருப்பினும் இதில் WAP மற்றும் GPRS வழங்கப்பட்டு நெட்வொர்க் தொடர்பினை எளிதாக்குகின்றன. வயர்லெஸ் ஸ்டீரியோ செட் பயன்படுத்த AD2P இணைந்த புளுடூத் தரப்பட்டுள்ளது.

இவை தவிர வழக்கம்போல மற்ற அனைத்து வசதிகளும் (கன்வெர்டர், காலண்டர், அலாரம் கிளாக், செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்து வைக்கும் வசதி) தரப்பட்டுள்ளன. 12.4 மிமீ தடிமனில் 74 கிராம் மட்டுமே எடையாகக் கொண்டுள்ள இது பலரின் விருப்பமாக அமைய வாய்ப்புள்ளது

பயர்பாக்ஸ் ட்ரிக்ஸ்

பயர்பாக்ஸ் பிரவுசர் குறித்து பல்வேறு டிப்ஸ்களும் தகவல்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இந்த டிப்ஸ்களே அதன் பயன்பாட்டிற்கும் அடிப்படையாய் அமைகின்றன.

அண்மையில் அதிகம் அறியப்படாத வசதிகள் சிலவற்றை பயர்பாக்ஸ் தொகுப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையை ஏற்பட்டது. அவை அனைத்துமே ஒருவருடைய பிரவுசிங் அனுபவத்தினை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் அமைப்பதாக உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.


1. டேப்களுக்கு காப்பி அமைக்க:

ஒரு குறிப்பிட்ட டேப்பில் அதற்கான திறக்கப்பட்ட தளம் இருக்கும். இப்படியே நிறைய தளங்களைத் திறக்கலாம். சில வேளைகளில் இரு முனைகளில் உள்ள டேப்களில் உள்ள தளங்களை அடுத்தடுத்து பார்க்க வேண்டியதிருக்கும். அப்படியானால் ஒரு முனையில் உள்ள டேப்பினை அடுத்த முனையில் உள்ள தளம் அருகே இழுத்து வைக்கலாமா?

அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கு ஒரு காப்பி எடுத்து, இன்னொரு முனையின் அருகே அமைத்துவிட்டால் நன்றாக இருக்கும் அல்லவா! அதெப்படி ஒரு டேபிற்கு காப்பி அமைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதா! ஆனால் காப்பி அமைக்க முடியும் என்பதே உண்மை.

எந்த டேப்பிற்கு காப்பி அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதன் மீது கர்சரை வைத்து, பின் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறே அதனை இழுத்து வந்து, டேப் பாரில் காலியாக உள்ள இடத்தில் விடவும். இப்போது விட்ட இடத்தில் அந்த டேபிற்கான காப்பி கிடைக்கும். இதனையும் திறந்து இயக்கலாம். தேவையில்லை என்றால் ஒன்றை மட்டும் மூடிவிடலாம்.


2.டூல்பாரில் சிறிய ஐகான்கள்:

இது ஒரு சின்ன வசதிதான். இருந்தாலும் பலர் இதனை விரும்பிப் பயன்படுத்துவார்கள் என்று எண்ணுகிறேன். நேவிகேஷன் பட்டன்களை சிறிதாக அமைக்க விரும்புகிறீர்களா! டூல்பாரில் உள்ள ஹோம் ஐகான் மீது கர்சரைக் கொண்டு ரைட் கிளிக் செய்திடவும்.

கிடைக்கும் மெனுவில் கஸ்டமைஸ் (Customize) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் கட்டத்தில் உள்ள ஐகான்களை நீக்கலாம்; அல்லது புதியனவற்றை இணைக்கலாம். அதே நேரத்தில் யூஸ் ஸ்மால் ஐகான்ஸ் என்று இருக்கும் இடத்தில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால் ஐகான்கள் அனைத்தும் சிறியதாகக் காட்டப்படும்

எல்.ஜி.யின் முதல் காம்பேக்ட் டச் ஸ்கிரீன் போன்

பொதுவாக டச் ஸ்கிரீன் அல்லது பெரிய திரை என்றிருந்தால், மொபைல் போனின் சைஸ் சற்று அடங்காமல் இருக்கும். ஆனால் நாம் எல்லாருமே சிறிய, கைக்கு அடங்கிய வடிவில் போன் இருப்பதையே விரும்புகிறோம். இதனை பன்னாட்டளவில் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் அண்மையில் மொபைல் போன் ஒன்றை அறிமுகப்படுத்தியது.


எல்.ஜி – ஜி.டி.510 எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன் 3 அங்குல டச் ஸ்கிரீன் கொண்டதாக இருப்பது மட்டுமின்றி, சிறிய அளவில் கைக்கு அடக்கமாக உள்ளது. உலகிலேயே இந்த அளவில் டச் ஸ்கிரீன் திரையுடன் அடக்கமான அளவில் இருப்பது இதுதான் என்றும் அறிவித்துள்ளது.


வாடிக்கையாளர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் பலர் தாங்கள் பயன்படுத்தாத, தங்களுக்குத் தேவையற்ற வசதிகள் இருப்பதனை விரும்பவில்லை என்பதனையும் எல்.ஜி. உறுதிப்படுத்தியுள்ளது. எனவே அதன் அடிப்படையில் அடிப்படையில் தேவைப்படும் சில கூடுதல் வசதிகளை மட்டும் வைத்துக் கொண்டு, தேவையற்ற சில வசதிகளை நீக்கியுள்ளது எல்.ஜி.


தற்போதைக்கு இந்த போன் எத்தகைய வசதிகளைக் கொண்டு இயங்குகிறது என வந்துள்ள வீடியோ காட்சிகள் தான் நமக்கு இந்த போனைக் காட்டியுள்ளன. இதில் மல்ட்டி மீடியா அம்சங்கள் அனைத்தும் உள்ளன. உள் நினைவகம் 8 ஜிபி.

இதனால் திரைப்படங்களையும், பாடல்களையும் அதிக எண்ணிக்கையில் பதிந்து இயக்கலாம். இதில் 3 மெகா பிக்ஸெல் கேமரா தரப்பட்டுள்ளது. வீடியோ இயக்கத்தையும் இதில் மேற்கொள்ளலாம்.

இதில் ஒவ்வாத ஒன்று என்று சொன்னால், அது அழைப்புகளை எடுப்பதற்கும், முடிப்பதற்கும் ஒரே ஒரு பட்டன் தந்திருப்பதுதான்.

கீ பட்டன்களுக்குக் கீழாக சிகப்பு அல்லது பச்சை வண்ணத்தில் போனின் செயல்பாட்டினை அறிவிக்கும் வகையில் விளக்கொளி கிடைக்கிறது. அனைத்து எல்.ஜி. டச் ஸ்கிரீன் போன்களில் உள்ள எஸ்–கிளாஸ் யூசர் இன்டர்பேஸ் இதில் தரப்படவில்லை.

அதுவும் ஒரு சிறப்புதான். மற்ற நாடுகளில் அக்டோபர் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும் இந்த போன் அடுத்து இந்தியாவிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அப்போது இதன் விலை தெரியவரும்

ரூ.19க்கு அதே நம்பரில் அடுத்த நிறுவனம்

தாங்கள் வாங்கிய மொபைல் சேவை தலைவலியைத் தந்தாலும், அந்த எண்ணைப் பலருக்குத் தந்துவிட்டோமே என்ற ஆதங்கத்தில், தொடர்ந்து ஒரே நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு, அரசு ஒரு தீர்வைத் தந்துள்ளது.

இந்த தலைவலி மருந்து விலை ரூ.19 மட்டுமே. ஆம், நம்மை அடையாளம் காட்டும் மொபைல் எண்ணை அப்படியே வைத்துக் கொண்டு, நிறுவனத்தை மட்டும் இனி மாற்றிக் கொள்ளலாம்.

டிசம்பர் 31 முதல் மெட்ரோ நகரங்களிலும், மார்ச் மாதம் முதல் நாட்டின் பிற பகுதிகளிலும் இந்த வசதி அமலுக்கு வருகிறது. ரூ. 19 என்பது அதிக பட்ச கட்டணமே. மொபைல் சேவை நிறுவனங்கள் அதற்கும் குறைந்த கட்டணத்தை வாங்கிக் கொண்டு மாற்றிக் கொடுக்கலாம்.

நிறுவனத்தை மாற்றிக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர், எந்த நிறுவனத்திற்கு மாறிக் கொள்ள விரும்புகிறாரோ, அந்த நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அவருடைய எண்ணை ஏற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனம், விண்ணப்பத்தின் மீதான முடிவினை நான்கு வேலை நாட்களுக்குள் அறிவித்தாக வேண்டும்.

தற்போதைய கணிப்பின் படி, 25 சதவீத வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் மாற்றும் வசதியை போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள்தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்களே அதிகம் உள்ளனர் என்பதுவும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நவம்பர் மாதத்தில் தன் மொபைல் சந்தாதாரர் எண்ணிக்கையை 50 கோடியாக உயர்த்தியுள்ளது இந்தியா. இன்னும் 60 கோடி பேர் இணைப்பினைப் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மார்க்கட்டைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்தான் ராஜா.

எனவே தான் பல்வேறு திட்டங்கள் மூலம் பழைய மற்றும் புதிய நிறுவனங்கள்,மக்களைக் கவர முயற்சிக்கின்றனர். புதிய நிறுவனங்கள் இந்த நிறுவனம் மாற்றும் வசதியைத் தங்கள் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஏற்கனவே தங்கள் எண்களை விட்டுவிட்டு, புதிய நிறுவனங்களிடம் புதிய இணைப்புகளை மாதந்தோறும் பெறுபவர் எண்ணிக்கை 3 முதல் 4 சதவிகிதம் ஆக உள்ளது. இது அடுத்த மாதம் முதல் மிக மிக அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் அதிகம் இருப்பார்கள். நல்ல தரமான நெட்வொர்க் இணைப்பு வசதியைத் தரும் பழைய நிறுவனங்களும், புதிய புதிய திட்டங்கள் மூலம் மிகக் குறைவான கட்டணத்தில் இணைப்பு தரும் புதிய நிறுவனங்களும் இந்த புதிய சலுகை மூலம் நிச்சயம் பயன்பெறுவார்கள்.

இந்த வசதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உட்பட 50 நாடுகளுக்கும் மேலாக, ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Twitter buys location tracking entity Mixer Labs

Famed micro-blogging site Twitter has acquired location tracking firm Mixer Labs for an undisclosed amount. The acquisition would help the site to enhance the "contextual" relevance of location to tweets – messages posted on the site which can have a maximum of 140 characters.

In a blog on Wednesday, Twitter said it has bought Mixer Labs without disclosing the financial details.

Mixer Labs is the creator of GeoAPI, a comprehensive service for helping developers build geolocation-aware applications.

"... (Mixer Labs) they're part of Twitter and will be working to combine the contextual relevance of location to tweets," the blog noted.

Both entities would together develop features to make the micro-blogging site more interesting and "relevant to daily life", irrespective of one's location.

"As a dramatic example, twittering 'Earthquake!' alone is not as informative as 'Earthquake!' coupled with your current location," the blog said.

A popular site for social networking, Twitter is estimated to have more than 50 million users across the world.

உலகின் காஸ்ட்லி மொபைல்

பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, உலகிலேயே அதிக விலையுள்ள மொபைல் ஒன்றை ஆர்டரின் பேரில் தயாரித்துள்ளது. இதன் மதிப்பு ரூ.14 கோடியே 70 லட்சம்.

இது 22 காரட் தங்கத்தில் செய்யப்பட்டது. 200 வைரக் கற்கள் இதில் பதிக்கப்பட்டுள்ளன. போனின் முகப்பில் 136 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் இலச்சினை 53 வைரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முன் பகுதியில் நேவிகேஷன் கீ அமைக்க 7.1 கேரட் வைரம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்ந்த மொபைல் போனை உருவாக்க பத்து மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனை வைத்து எடுத்துச் செல்ல 7 கிலோ கிரானைட் கல்லில் ஒரு பெட்டி தயாரிக்கப்பட்டது.

உள்புறமாக, விலை உயர்ந்த தோலில் வேலைப்பாடுடன் கூடிய அமைப்பு உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

ஐ போன் 3ஜி சுப்ரீம் என இது அழைக்கப்படுகிறது. இதன் உரிமையாளர் யார்? ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களில் ஒருவர்.

இவர் தன் பெயர் பிரபலமாவதை விரும்பாததால் தன்னைப்பற்றிய தகவல்களைத் தரவில்லை

படங்களை கையாள பிக்ஸர் ரீசைஸர்

உங்களிடம் ஒரு TIFF பார்மட் பைல் உள்ளது. இதனை JPEG அல்லது BMP பார்மட்டில் பைலாக மாற்ற எண்ணினால் என்ன செய்திடலாம். முதலில் எந்த பார்மட்டில் உங்களிடம் பைல் இருந்தாலும் அதனை ஏதேனும் பிக்சர் எடிட்டர் புரோகிராமில் (எம்.எஸ். பெயிண்ட் / அடோப் போட்டோஷாப் போன்றவை) திறக்கவும்.


பின் File , மெனு திறந்து கிடைக்கும் மெனுவில் Save As என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பைல் சேவ் செய்யப்படும் இடத்தில் பைலின் பெயர் தரும் விண்டோவிற்குக் கீழாக பைல் பார்மட்டின் பெயர்கள் வரிசையாகக் கிடைக்கும்.


இதில் எந்த பார்மட்டில் சேவ் செய்திட விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திட கிளிக் செய்தால் புதிய பார்மட்டில் சேவ் செய்யப்படும். அநேகமாக அனைத்து பிக்சர் எடிட்டர்களும் இந்த வசதியைக் கொண்டிருக் கின்றன.


நீங்கள் பெரும்பாலும் கேள்விப்படாத புரோகிராம் ஒன்றினைச் சொல்லட்டுமா? இணைய தளத்தில் PIXresizerஎன்று ஒரு இலவச புரோகிராம் (முகவரி : http:// bluefive. pair.com/pixresizer.htm ) கிடைக்கிறது.


இதனை டவுண்லோட் செய்து இது போன்ற பிக்சர் பார்மட் மாற்றங்களுக்குப் பயன்படுத்தலாம். பார்மட் மாற்றம் மட்டுமின்றி படங்களின் அளவு களை மாற்றவும் இது உதவுகிறது. இவ்வாறு மாற்றப்படும் படங்கள் புதிய தனியான போல்டரில் பதியப்படுகின்றன.

ஒரிஜினல் படங்கள் அப்படியே மாற்றம் எதுவும் இல்லாமல் காக்கப்படுகின்றன. படங்களை இமெயிலில் அனுப்பும்போதும், இணைய தளத்தில் பதித்திட திட்டமிடுகையிலும் அவற்றின் அளவுகளை நாம் சுருக்க வேண்டியதிருக்கும். படங்களின் தன்மை கெடாமல் இவற்றைச் சுருக்க இந்த புரோகிராம் உதவுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் ஒரே மாதிரியான பார்மட் மாற்றம் மற்றும் அளவு மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்றால் அவை அனைத்தையும் மொத்தமாக குரூப் செய்து ஒரே கட்டளையில் மாற்றுவதற்கும் இது உதவுகிறது.

அனைத்தையும் மாற்ற மற்ற பிக்சர் எடிட்டர் புரோகிராம்களைக் காட்டிலும் குறைவான நேரமே எடுத்துக் கொள்கிறது. இந்த புரோகிராமைப் பயன்படுத்த டெக்னிகல் விஷய ங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

எல்லாமே எளிதாக மேற்கொள்ளும் வகையில் இன்டர்பேஸ் கொடுக் கப் பட்டுள்ளது. புரோகிராமைப் பதிந்து இயக்க 2 எம்பி இடம் இருந்தால் போதும். டிஜிட்டல் போட்டோ கிராபர்களுக்கும் இணையதளத்தில் படங்களை அதிகம் பயன்படுத்துபவர் களுக் கும் இந்த புரோகிராம் மிகவும் பயன் உடையதாக இருக்கும்.

குரோம் தரும் தீம் செட்டிங்ஸ்

கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசருக்குப் பல புதிய தீம் காட்சிகளை வெளியிட்டுள்ளது. சாதாரண அடிப்படையில் அமைந்த காட்சிகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட சில காட்சிகள் வரை இதில் கிடைக்கின்றன.

மொத்தம் 29 டெம்ப்ளேட்டுகள் தரப்பட்டுள் ளன. இவை அண்மையில் வெளியான குரோம் பிரவுசர் பதிப்பு 3ல் பயன்படுத்த முடியும்.

இவற்றைப் பயன்படுத்த குரோம் பிரவுசர் சென்று, பின் இதன் காலரிக்குச் செல்ல வேண்டும். இதன் முகவரி: https://tools.google. com/chrome/intl/en/themes/index.html இங்கு தீம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கீழாக உள்ள டவுண்லோட் மேனேஜர் பேன் மூலமாக டவுண்லோட் செய்திடலாம்.

டவுண்லோட் செய்து முடித்தவுடன் “ணிணீஞுண” என்பதில் கிளிக் செய்திட வேண்டும். உடன் தேர்ந்தெடுத்த தீம் கொண்டு குரோம் பிரவுசர் காட்சியளிக்கும். இதில் என்ன விசேஷம் என்றால், வழக்கமான மாற்றாத டிபால்ட் தோற்றத் தினை உடனடியாக பெர்சனல் ஸ்டப் என்றுள்ள லிங்க்கில் கிளிக் செய்து பெறலாம்.

இவ்வாறு தேர்ந்தெ டுத்த தீம் மற்றும் டிபால்ட் தோற்றம் என மாற்றிக் கொள்வது எளிதாகும். ஆனால் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தீம் அமைப்பது குரோம் செயல்பாட்டின் வேகத்தைச் சற்று குறைக்கலாம். இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும்.

பயர்பாக்ஸ் தரும் தீம் காலரியுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சாதாரணம். அதன் வகைகள் அதிகமானவை; அற்புதமானவை

இமெயில் அனுப்பிவரின் ஐ.பி.முகவரி

நமக்கு வந்த இமெயில்களை நாம் திறக்கையில் அதனை அனுப்பியவரின் யூசர் நேம், சப்ஜெக்ட், அதன் காப்பியைப் பெறுபவர் போன்ற தகவல்கள் நிச்சயம் இருக்கும்.


ஒரு சில இமெயில்களில் தான் அதனை அனுப்பியவரின் ஐ.பி. முகவரி, எந்த நெட்வொர்க்கிலிருந்து அனுப்பப்பட்டது, அதற்குப் பதில் இமெயில் அனுப்பினால் எந்த முகவரிக்கு போய்ச் சேரும்; அல்லது பதில் அனுப்பினால் அது பெறப்படாத மெயில் வகையா என்ற அனைத்துத் தகவல்களும் இருக்கும். சில நேரங்களில் யூசர் நேம் வித்தியாசமாக இருக்கும். அதனால் யார் அனுப்பியது என்றே தெரியாது.


அப்போது நாம் அனுப்பியவரின் ஐ.பி. முகவரியைக் கண்டறிந்தால் அதனை அனுப்பியவரின் முகவரியை நெருங்க முடியும். எப்படி இமெயில் அனுப்பியவரின் ஐ.பி. முகவரியைக் கண்டறிவது என்று பார்க்கலாம். யாஹூ, ஜிமெயில் மற்றும் ஹாட்மெயில்களில் இதற்கான செயல்முறைகளைப் பார்க்கலாம்



ஹாட்மெயில்: முதலில் உங்கள் ஹாட்மெயில் அக்கவுண்ட்டில் உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்ளே செல்லவும். மேலாக உள்ள Mail டேப்பில் கிளிக் செய்திடவும். ஐ.பி.முகவரி பார்க்க வேண்டிய மெயிலைத் திறக்கவும்.


ஹெடர்ஸ் என்று மேலே சொல்லப்பட்ட அனைத்து தகவல்களும் தெரிகிறதா என்று பார்க்கவும். தெரியவில்லை என்றால் ஹெடர்கள் காட்டப்படாமல் செட் செய்யப்பட்டு உங்களுக்கு மெயில் அனுப்பப்பட்டது என்று பொருள். இப்போது ஹெடர்களைக் கண்டறிய வேண்டும்.



மேலே வலது மூலையில் உள்ள Options என்பதில் கிளிக் செய்திடவும். Mail Options பக்கத்தில் Mail Display Settings என்பதில் கிளிக் செய்திடவும். Message ஹெடர்ஸ் என்பதில் Advanced option செக் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திடவும்.


ஓகே கிளிக் செய்திடுக. மீண்டும் மெயில் சென்று சம்பந்தப்பட்ட மெயிலைத் திறக்கவும். அங்கு XOriginatingIP என்று தொடங்கி அதனுடன் ஒரு ஐ.பி. முகவரி இருக்கும். அதுதான் அனுப்பியவரின் ஐ.பி. முகவரி.

Related Posts with Thumbnails