எதையும் தாங்கும் நோக்கியா மொபைல்

நோக்கியா நிறுவனம் 3720 என்ற எண்ணுடன் தன் கிளாசிக் சிரீஸ் வரிசையில் மொபைல் போன் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த போன் கீழே போட்டு எடுத்தாலும் அந்த அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நோக்கியா அறிவித்துள்ளது. அத்துடன் தண்ணீர் மற்றும் தூசியினைத் தாங்கும் வகையிலும் இது உள்ளது.

கடற்கரை, தூசு கிளம்பும் கட்டட பணி நடக்கும் இடங்கள், அடிக்கடி மழை பொழியும் இடங்கள் ஆகியவற்றில் வசிக்கும் மற்றும் பணியாற்றுபவர்களுக்கு இந்த போன் ஏற்றதாக இருக்கும். நீண்ட நாள் உழைக்கக் கூடிய மொபைலை வாங்க விரும்புவோர் இதனை நாடலாம்.

இது ஒரு ஹேண்டி பார் டைப் மொபைல். சிம்பியன் எஸ் 40 சிஸ்டம் இயங்குகிறது. உள்ளிருக்கும் சர்க்யூட் போர்டும் பேட்டரி கம்பார்ட்மெண்ட்டும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. பேட்டரியை மாற்ற வேண்டும் என்றாலும் ஸ்க்ரூ கழட்டித்தான் மாற்ற வேண்டும்.

2,2 அங்குல வண்ணத்திரை, எல்.இ.டி. பிளாஷ் லைட் இணைந்த 2 எம்பி திறன் கொண்ட கேமரா, மைக்ரோ எஸ்டி கார்ட் சப்போர்ட், நோக்கியா மேப்ஸ், ஜி.பி.ஆர்.எஸ். / எட்ஜ் தொழில் நுட்பம், A2DP இணைந்த புளுடூத் 2.1, ஆர்.டி.எஸ். கொண்ட ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ மற்றும் ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட் எனப் பல்வேறு வசதிகள் இந்த போனில் தரப்படுகின்றன.

ரூ.8,520 என்ற விலையில்இது கிடைக்கலாம். சாம்சங் பி 1200 இதற்கு இணையாக மார்க்கட்டில் போட்டியிடலாம்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails