சோனி எரிக்சன் தரும் புதிய வாக்மேன் மொபைல்கள்

W205 மற்றும் W395 என்ற பெயர்களில் இரண்டு புதிய வாக்மேன் போன்களைத் தன் ஸ்லைடர் போன் வரிசையில் சோனி எரிக்சன் அண்மையில் சேர்த்து விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. வாக்மேன் போன்களை வடிவமைத்து தனிச் சிறப்போடு அறிமுகப்படுத்திய பெருமை சோனி எரிக்சன் நிறுவனத்திற்கு உண்டு. அந்த பெருமைக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்த போன்களும் உள்ளன.



W205 மொபைல் போனில் நான்கு அட்ரஸ் புக் வைத்துக் கொள்ளும் வசதி உள்ளதால் ஒரே குடும்பத்தில் பலர் இதனைத் தங்கள் தனி விருப்பங்களுடன் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் டிஸ்பிளே திரை 1.8 அங்குல அகலத்தில் 128 x 160 ரெசல்யூசனுடன் காட்சி தருகிறது. GPRSமற்றும் EDGE தொழில் நுட்ப வசதி நெட்வொர்க் இணைப்பை எளிதாக்குகிறது. 1.3 மெகா பிக்ஸெல் திறனுடன் தரப்பட்டுள்ள கேமரா, ரெகார்டிங் வசதியுடன் உள்ள எப்.எம். ரேடியோ, மொபைல் தொலைந்து போனால் கண்டறிய ட்ரேக் ஐ.டி., புளுடூத் மற்றும் எம்2 கார்ட் சப்போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.



W205 போனைக் காட்டிலும் சற்று மேம்படுத்தப்பட்ட வசதிகளைக் கொண்டதாக W395 மொபைல் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 2 அங்குல அகலத்தில் வண்ணத் திரை 176 x 220 ரெசல்யூசனுடன் உள்ளது. பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், A2DP கொண்ட புளுடூத், எப்.எம். ரேடியோ, மோஷன் கேம் சப்போர்ட், ட்ரேக் ஐ.டி., 2 மெகாபிக் ஸெல் கேமரா, எம்2 கார்ட் சப்போர்ட் ஆகிய பல வசதிகள் இதன் தரத்தை உயர்த்துகின்றன.



W205 மொபைலுடன் HPM64 ஆச்ண்ண் ரெப்ளெக்ஸ் ஹெட்போன், W395 மொபைலுடன் எச்.பி.எம். – 62 ஸ்டீரியோ ஹெட்செட் ஆகியவை வழங்கப்படுகின்றன. W205 மொபைல் விலை ரூ. 5,795;W395 மொபைல் விலை ரூ. 8,395. இவை ஒவ்வொன்றுடனும் 1 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails