Saturday, October 31, 2009

சமையல் குறிப்பு அப்லோட் செய்திட

எனக்கு யார் தருவது சமையல் குறிப்பு? நானே ஒரு நல்ல எக்ஸ்பர்ட் ஆக்கும் என்று எண்ணுபவரா நீங்கள். இதோ உங்களுக்கென ஓர் இணைய தளம் இயங்குகிறது.

இங்கு பலவிதமான உணவு தயாரிக்க சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படித்துப் பார்த்து, ஏதேனும் கூடுதலாகச் சேர்த்தால் உணவின் ருசி கூடும் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா!

அப்படியானால் அந்த விபரங்களைத் தயார் செய்து இந்த தளத்தில் அப்லோட் செய்திடலாம். இந்த தளத்தின் பெயர் புட்டிஸ்ட்டா (Foodista). இதன் முகவரிhttp://www.foodista.com/ . "The Cooking Encyclo pedia Everyone Can Edit" என்றே இதன் முகப்பில் இந்த தளத்திற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது.

எனவே நம் உணவு முறைகளைப் பற்றிய குறிப்புகள், இதில் தரப்பட்டுள்ள உணவு முறைகளுக்கான குறிப்புகளில் மாற்றங்கள் ஆகியவற்றை நீங்கள் தாராளமாக இந்த தளத்திற்கு அனுப்பலாம்.

மேலும் நீங்கள் தயார் செய்திடும் உணவு இப்படித்தான் இருக்கும் என்று காட்ட அதனைப் போட்டோ எடுத்தும் அனுப்பலாம்

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...