பிளாக் பெரி மற்றும் பிளாக் பெரி கர்வ் 8900 மொபைல் போன்களை டாட்டா டொகோமோ தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
சில மாதங்களுக்கு முன், இந்தியாவில் 8 தொலை தொடர்பு மண்டலங்களில் தன் மொபைல் சேவையினை வழங்கத் தொடங்கிய டாட்டா டொகோமோ, தன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சாதனங்களைத் தரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இப்போது பிளாக் பெரி போன்களை வழங்குகிறது என்று இந்நிறுவன தலைவர் தீபக் அறிவித்துள்ளார்.
இமெயில், மெசேஜிங், சோஷியல் நெட்வொர்க்கிங், மொபைல் இன்டர்நெட் மற்றும் மல்ட்டி மீடியா வசதிகளை எதிர்பார்க்கும் பிசினஸ் மக்களுக்கு இந்த போன்கள் நிச்சயம் உகந்ததாக இருக்கும் என்று கூறிய அவர்,
இந்த போன்களுக்கென்று இரண்டு புதிய சேவை திட்டங்களை வடிவமைத்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். அவை Do299 மற்றும் Do899 என அழைக்கப்படுகின்றன.
அளவற்ற இமெயில் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜ் பயன்பாட்டினை Do299 திட்டமும், அவற்றுடன் அளவற்ற இன்டர்நெட் பயன்பாட்டினையும் சேர்த்து Do899 திட்டமும் வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
பேசும் விநாடிகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி, சிறிது நாட்களிலேயே மக்களிடம் பரவலாகப் பெயர் பெற்ற, டாட்டா டொகோமோ நிறுவனம் அண்மையில் இன்னுமொரு புரட்சிகரமான திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
டயட் – எஸ்.எம்.எஸ் என்ற இந்த திட்டத்தின் கீழ், ஒருவர் தான் அனுப்பும் 15 கேரக்டர்கள் கொண்ட எஸ்.எம்.எஸ். செய்தியில், ஒரு கேரக்டருக்கு ஒரு பைசா கட்டணமாகச் செலுத்தினால் போதும். கேரக்டர்களுக்கு இடையே விடப்படும் இடைவெளிகளுக்கு பணம் இல்லை.
இந்த சேவை டாட்ட டொகோமோ வாடிக்கையாளர்களுக்குள் மெசேஜ் அனுப்பும்போது மட்டுமே அமலாகும்.
0 comments:
Post a Comment