பரந்து விரிந்தது டாட்டா டொகோமோ

அறிமுகமான சில மாதத்தில் 5 லட்சத்திற்கும் மேலான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைத் தமிழ்நாட்டில் பெற்றுள்ளது டாட்டா டொகோமோ.

சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினைத் தந்து வந்த டாட்டா டெலி சர்வீசஸ் ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து ஜி.எஸ்.எம். வகை மொபைல் சேவையினை வழங்க அண்மையில் அனுமதி பெற்றது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவில் 19 நகரங்களில் இந்த சேவையினை வழங்க அனுமதி பெற்றுள்ளது.

விரைவில் தாங்கள் வழங்க இருக்கும் கூடுதல் மதிப்பு சேவைகள் மொபைல் போன் பயன்பாட்டில் புதிய திருப்பத்தினை உண்டாக்கும் என இந்நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி நாக வேலமுரி தெரிவித்தார்.

இலவச வாய்ஸ் மெயில், குறிப்பிட்ட நேரத்தில் எஸ்.எம்.எஸ். சேவை, இலவச மிஸ்டு கால் அலர்ட், கால்–மி ட்யூன் போன்ற பல புதுவித சேவைகள் வழங்க இருப்பதாகத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails