போலிகளை ஒழிக்க மைக்ரோசாப்ட் களம் இறங்கியது

மைக்ரோ சாப்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் போலி சாப்ட்வேர் ஒழிப்பு முயற்சியில் ரெய்டுகளை நடத்தி வருகிறது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் உதவி இல்லாமல் எதுவுமே செயல்பட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் இயங்குதளமாக (ஆபரேட்டிங் சிஸ்டம்) மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளான விண்டோஸ் 2000, எச்.பி., விஸ்டா போன்ற சாப்ட்வேர்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.



கம்ப்யூட்டர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கம்ப்யூட்டர்களுடன் மைக்ரோசாப்ட் ஒரிஜினல் சாப்ட்வேர்களை இணைத்து வழங்கவேண்டியது கடமையாகும். ஆனால், 2 ஆயிரம் ரூபாய் செலவை குறைப்பதற்காக மைக்ரோ சாப்ட்டின் போலி சாப்ட்வேர்களை வழங்கிவிடுகின்றன.


இதனால், அதிக அளவில் வைரஸ் பரவுகிறது. மேலும், மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தும் புது விஷயங்கள் கிடைக்காமல் போய் விடுகின்றன. எனவே, மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது.


நெல்லையில் இன்டெர்நெட் மையங்கள், ஓட்டல்கள், பிரபல கல்விநிறுவனங்கள், மருத்துவமனைகளில் நடத்திய சோதனையில் போலி சாப்ட்வேர் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.


அந்த நிறுவனங்கள் போலியான சாப்ட்வேர்களை பயன்படுத்தி வருவதை ஒப்புக்கொண்டு, உடனடியாக மைக்ரோசாப்ட் நிறுவன சாப்ட்வேர்களை பெற பணம் செலுத்தியுள்ளனர். நெல்லையில், 15 நிறுவனங்களில் இருந்து இவ்வாறு ஒரு கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.



இதுகுறித்து நெல்லை கம்ப்யூட்டர் டீலர் ஒருவர் கூறுகையில், "மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரிஜினலை பயன்படுத்துவதுதான் கம்ப்யூட்டருக்கும் நல்லது. போலி என்றால் ஹாக்கர்ஸ் எனப்படும் மென்பொருள் திருடர்கள் நம் கம்யூட்டருக்குள் நுழைய வாய்ப்புள்ளது.


போலி சாப்ட்வேர் பயன்படுத்துவதால் ஸ்பேம் எனப்படும் வைரஸ் தரும் மெயில்களை தவிர்க்க முடியாது. வரும் அக்., 22ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய படைப்பான விண்டோஸ் 7 அறிமுகமாகிறது. அதற்கு முன், போலி சாப்ட்வேர்களை களைய நடவடிக்கை எடுத்துவருகின்றனர்', என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails