சமுதாய இணைய வலை அமைப்பில் முதல் இடம் பெற்றிருக்கும் பேஸ்புக் இந்தியாவில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைப் பெறும் வகையில் இந்திய மொழிகளில் தன்வலைத் தளத்தை உருவாக்கியுள்ளது.
முதல் கட்டமாக தமிழ், இந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பேஸ்புக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தமிழிலேயே தங்கள் அக்கவுண்ட்டை உருவாக்கி அப்டேட் செய்திடலாம்.
பேஸ்புக் வலைத்தளத்திற்குப் போட்டியாகச் செயல்பட்டு வரும் ஆர்குட் ஏற்கனவே தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒலிக் குறிப்பின் அடிப்படையில் அந்த அந்த மொழிகளில் எழுதும் வசதியைத் தந்துள்ளது.
ஆனால் பேஸ் புக் இன்னும் அந்த வசதியைத் தரவில்லை. இருப்பினும் தற்போதைய வசதியின் அடிப்படையில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பேஸ்புக் பெறுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
0 comments:
Post a Comment