நோக்கியா தர இருக்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள்

மொபைல் போனில் உலக அளவில் கலக்கி வரும் நோக்கியா நிறுவனம் பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பில் இறங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மொபைல் போன்கள் எல்லாம் சிறிய கம்ப்யூட்டராக, ஒரு பெர்சனல் கம்ப்யூட்டருக்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கையில், மொபைல் போன் வடிவமைத்து உருவாக்குவதில் முதல் இடத்தில் இருக்கும் நோக்கியா பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பில் இறங்குவது வியப்பே இல்லை.முதல் முதலாக அதன் Booklet 3G netbookவெளிவர இருக்கி றது. தொடர்ந்து 12 மணி நேரம் உழைக்கும் பேட்டரி இதில் இருக்கும். நோக்கியாவின் அண்மைக் காலத்திய மொபல் ஸ்மார்ட் போன்களைப் போல, இதில் மொபைல் பிராட்பேண்ட், வை–பி, புளுடூத், ஏ–ஜிபிஎஸ் ஆகிய வசதிகள் தரப்படும்.

பல வாடிக்கயாளர்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் அனைத்து வசதிகளுடன், எங்கும் எடுத்துச் சென்று எளிதாகப் பயன்படுத்த கம்ப்யூட்டர் ஒன்று வேண்டும் என விருப்பங்களைத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இந்த நெட்புக் உருவாகி உள்ளதாக நோக்கியா அறிவித்துள்ளது. மேலும் எப்போதும் இணையத் தொடர்பில் உள்ளதாக இந்த கம்ப்யூட்டர் அமைக்கப்படும்.நோக்கியாவின் இந்த Booklet 3G netbook எடை 1.25 கிலோ. இரண்டு செமீ தடிமனில் அமைக்கப்படும். பத்து அங்குல கிளாஸ் எச்.டி. ரெடி ஸ்கிரீன் தரப்படும். இதில் ஒரு எச்.டி.எம்.ஐ. போர்ட் இணைக்கப்படும். இதன் ப்ராசசருக்கு பேன் இருக்காது. இன்டெல் 1.6 கிகா ஹெர்ட்ஸ் வேக Atom Z530 ப்ராசசர் பயன்படுத்தப்படும்.இது விண்டோஸ் இயக்க அடிப்படையில் இயங்கினாலும் விண்டோஸ் இருக்காது என்றே தோன்றுகிறது.சென்ற ஜூன் மாதத் தில் நோக்கியா இன்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சாப்ட்வேர் நிறுவனமான ட்ரோல் டெக் நிறுவனத்தை வாங்கியது.


கிராபிகல் டூல் கிட் தயாரிப்பில் ஈடுபட்டு பெயர் வாங்கிய நிறுவனம் இது. தற்போது இதன் பெயரை நோக்கியா மாற்றி தன் தயாரிப்புகளுக்கு பயன்படுத்துகிறது. இன்டெல் உதவியுடன் லினக்ஸ் அடிப்படையிலான மொப்லிங்க் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நோக்கியா தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விரைவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்றும், இந்த நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் நெட்புக் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails