மூன்று புதிய குரு மொபைல்கள்

பட்ஜெட் போட்டு மொபைல் வாங்க விரும்பும் மக்களிடையே சாம்சங் நிறுவனத்தின் குரு மொபைல் போன்கள் பிரசித்தி பெற்றவை. அண்மையில் இந்த குரு வரிசையில் மூன்று புதிய மாடல்களை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

அவை குரு 2120, குரு 2130 மற்றும் குரு 1160 ஆகும். இதில் முதல் இரண்டு மாடல்களும், குரு சிரீஸ் மாடல்களில் முதல் முதலாக கேமராவினைக் கொண்டு வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரெகார்டிங் தன்மையுடன் கூடிய விஜிஏ கேமரா, எம்பி3 பிளே பேக், வயர்லெஸ் ஸ்டீரியோ எப்.எம்., புளுடூத், 2ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய மெமரி ஆகியவற்றை குரு மாடல்களில் அறிமுகப்படுத்தியதன் மூலம், பட்ஜெட் போன்களிலும் சிறந்த மல்ட்டி மீடியா அனுபவத்தினைத் தர முடியும் என்பதனை நாங்கள் நிரூபித்திருக்கிறோம் என்று சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு பொது மேலாளர் அசிம் வார்சி தெரிவித்தார்.
குரு 2120 :

இந்த மாடலில் 1.5 அங்குல வண்ணத்திரை, இணைய இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் வாப், புளுடூத், யு.எஸ்.பி., மியூசிக் பிளேயருக்கு ஒன் டச் கீ, ரெகார்டிங் வசதியுடன் கூடிய ஹேண்ட்ஸ் பிரீ எப்.எம். ரேடியோ, விஜிஏ கேமரா, இமேஜ் எடிட்டர், 2 ஜிபி வரை நீட்டிக்கக் கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஆகிய வழக்கமான வசதிகள் கொண்டுள்ளது.

இவற்றுடன் சில புதிய வசதிகளும் தரப்பட்டுள்ளன. பைக் மோட்/விஸ்பர் மோட் என ஒரு செட்டிங்ஸ் தரப்பட்டுள்ளது. பைக் மோட் மூலம், நாம் மோட்டார் சைக்கிளில் செல்கையில் குறிப்பிட்ட எண்களில் இருந்து போன் வந்தால் நமக்கு அலர்ட் கிடைத்து பேசலாம்.

இதனால் முக்கிய நபர்களிடமிருந்து போன் வந்தால், அவற்றை மிஸ் பண்ணும் நிலையைத் தவிர்க்கலாம். மொபைல் ட்ரேக்கர் வசதி தொலைந்து போனால் போனைத் தேட உதவிடும். நான்கு இந்திய மதங்களுக்கான கடவுள் தொழும் பாடல்கள் தரப்பட்டுள்ளன.

போனில் 9 இந்திய மொழிகளைக் கையாள முடியும். இதில் 1000 ட்அட திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 மணி நேரம் தொடர்ந்து பேச முடியும் என இந்நிறுவனத்தின் குறிப்பு கூறுகிறது.இந்த போனின் குறியீட்டு விலை ரூ.3,240.
குரு 2130:

மேலே தரப்பட்ட குரு 2120 மாடலில் தரப்பட்டுள்ள வசதி களுடன், இதில் டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த எப்.எம். ரேடியோவினை இயர் போன் இல்லாமல் ஸ்பீக்கரில் கேட்கலாம்.

உள்ளாக எப்.எம். ஆன்டென்னா தரப்பட்டுள்ளது.இதில் நான்கு ஜாவா கேம்ஸ் பதிந்து தரப்படுகிறது. இதன் குறியீட்டு விலை ரூ. 3,600.


குரு 1160:

இது மற்ற இரண்டிலிருந்து சற்று மாறுபட்டது. இரண்டு பேண்ட்களில் இயங்குகிறது. வயர்லெஸ் ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, டூயல் லவுட் ஸ்பீக்கர்கள், அருமையான ஒளி தரும் டார்ச் லைட், எம்பி3 ரிங் டோன், ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்குத் தாக்குப் பிடிக்கும் 1000 ட்அட திறன் கொண்ட பேட்டரி ஆகியவை தரப்பட்டுள்ளன.

பேட்டரி தொடர்ந்து 12.3 மணி நேரம் பேசக்கூடிய அளவில் மின்சக்தி கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் பைக் மோட் வசதி உள்ளது. 7 மொழிகளை இதில் கையாள முடியும். இதன் குறியீட்டு விலை ரூ.2,249.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails