பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பினை மொஸில்லா நிறுவனம் வழங்குகிறது. இந்த தொகுப்பிற்கு ஏன் வித்தியாசமாக பயர்பாக்ஸ் என ஆங்கிலத்தில் வந்தது என்று பலர் எண்ணினாலும் இதன் பின்னணி குறித்துத் தேடுவது இல்லை.
மொஸில்லாவின் ஒரு சோதனை திட்டமாகத்தான் பயர்பாக்ஸ் பிரவுசர் திட்டம் தொடங்கியது. தவே ஹையாட், பிளேக் ராஸ் ஆகிய இருவரும் இதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். முதலில் மொஸில்லா சூட் என்ற கூட்டுத் தொகுப்பில் ஆர்வம் இருந்தாலும் பின்னர் தனி பிரவுசராக மொஸில்லா பயர்பாக்ஸில் தனிக் கவனம் செலுத்தினார்கள்.
2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பயர்பாக்ஸ் மற்றும் தண்டர்பேர்ட் தொகுப்புகளில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்தனர்.
முதலில் இந்த திட்டத்திற்கு பீனிக்ஸ் (Phoenix) என்று பெயரிட்டனர். இந்த பெயர் பீனிக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வர்த்தகப் பெயருடன் பிரச்சினை ஏற்பட்டதால் பயர்பேர்ட் (Firebird)எனப் பெயரிட்டனர்.
இதற்கும் பயர்பேர்ட் டேட்டா பேஸ் சாப்ட்வேரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இதற்குப் பதிலளிக்கையில் பிரவுசரின் பெயர் மொஸில்லா பயர்பேர்ட் என்றுதான் எப்போதும் இருக்கும் என்று மொஸில்லாவின் சார்பில் எடுத்துச் சொல்லப்பட்டது. இதனால் பயர்பேர்ட் சாப்ட்வேர் தொகுப்புடன் பிரச்சினை இருக்காது என்று விவாதிக்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து அந்நிறுவனத்திடமிருந்து வற்புறுத்தல்களும் ஆட்சேபணைகளும் வந்ததனால் மொஸில்லா பயர்பேர்ட், மொஸில்லா பயர்பாக்ஸ் என மாற்றப்பட்டது. இதுவே எளிமையாக பயர்பாக்ஸ் என அழைக்கப்பட்டது.
மொஸில்லா இதனைச் சுருக்கமாக அழைக்கையில் Fx அல்லது fx என அழைக்கப்பட வேண்டும் என விரும்பியது. ஆனால் சுருக்கமாக இதனை FF என அழைப்பதே வழக்கமாகிவிட்டது.
பயர்பாக்ஸ் பிரவுசர் திட்டம் பல மாற்றங்களுக்கு உள்ளாகி பயர்பாக்ஸ் பதிப்பு 1, 2004 நவம்பர் 9 அன்று வெளியானது. இதன் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன் சிறப்பான அப்டேட் பயர்பாக்ஸ் பதிப்பு 1.5 நவம்பர் 29, 2005 அன்று வெளியானது.
தொடர்ந்து முன்னேறி அண்மையில் ஜூலை முதல் வாரத்தில் பயர்பாக்ஸ் 3.5 வெளியானது நம் அனைவருக்கும் தெரியும்.
0 comments:
Post a Comment