இந்தியாவின் முன்னேற்றத்தில் பிளாக்பெரி

பிளாக்பெரி போன் பயன்பாடு இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கினை ஆற்றும் என பிளாக் பெரி போன் மற்றும் சேவையினை வழங்கிவரும் கனடா நாட்டு நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தின் தலைவர் ஜிம் பால்சில்லி தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் முழுமையான வளர்ந்த நாடாக இந்தியா உருவாக இருக்கிறது. இதற்கு பிளாக்பெரி போன் சேவை நிச்சயம் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். உலகத் தரம் வாய்ந்த இந்திய தொழில் துறையில் பிளாக் பெரி மொபைல் போன் சேவை முக்கிய அத்தியாவசியமான சாதனம் என்னும் இடத்தைப் பெற்றுவிட்டது.

பிளாக்பெரிக்கு ஏற்கனவே ஐந்து கேரியர் நிறுவனங்கள் இயங்குகின்றன –– பார்தி ஏர்டெல், மற்றும் டாட்டா கம்யூனிகேஷன்ஸ். விரைவில் மேலும் இரண்டு கேரியர் நெட்வொர்க்குகள் இணைக்கப்படவுள்ளன.

மும்பையில் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் தன் அலுவலகத்தைத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல்லாயிரக் கணக்கில் உள்ள பிளாக்பெரி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இனி பல லட்சங்களாக உயரும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வியக்கத்தக்க வகையில் அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றதென்றும், 2020 ஆம் ஆண்டில் நிச்சயமாய் பொருளாதாரத்தில் உலகின் நான்கு வளர்ந்த நாடுகளில் இதுவும் ஒன்றாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே திறமையானவர்களைப் பரிமாறிக் கொள்ள கனடா நாட்டின் கல்வி குழுமம் ஒன்று நிரந்தரமாக இந்தியாவில் இயங்குவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails