விண்டோஸ் 7 நேரடி இறக்கம்

மைக்ரோஸொப்ட் நிறுவனம் தனி நபர் கணினிகளுக்கான தனது புதிய இயங்கு தளத்ததின் பீட்டா பதிப்பை (Beta Version) கடந்த வாரம் வெளியிட்டது.

விண்டோஸ் 7 (Seven) எனப் பெயரிடப்பட்டிருகும் இந்த இயங்கு தளம் இது வரை வெளி வந்த விண்டோஸ் பதிப்புக்கள் அனைத்தையும் விட மேம்பட்டதாக இருக்கும் என மைக்ரோஸொப்ட் மார் தட்டிக் கொள்கிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பபட்ட விண்டோஸின் முன்னைய பதிப்பான விஸ்டா கணினி பயனர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

மாறாக அது மைக்ரோஸொப்ட் நிறுவனம் இதுவரை பெற்றிருந்த நற்பெயருக்கும் களங்கம் விளைவித்தது, எனவே விஸ்டாவினால் இழந்த பெயரை சரிசெய்வதற்காக புதிய ஒரு இயங்கு தளத்தை விரைவிலேயே வெளியிட வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் மைக்ரோஸொப்ட் நிறுவனத்துக்கு ஏறபட்டது.

இழந்த பெயரை மீட்டுக்கொள்ளவும் விண்டோஸுக்குப் போட்டியாக வந்திருக்கும் லினக்ஸின் துரித வளர்ச்சிக்கு ஈடு கொடுக்குமாறும் மேலதிக வசதிகளுடனும் உருவாக்கப் பட்டுள்ளது விண்டோஸ் 7.
விண்டோஸ் 7 இறக்கம் செய்ய கீழே குறிபிட்டுள்ள சுட்டிகளை சொடுக்கவும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails