ஏர்டெல் வழங்கும் பிளாக்பெரி 8520

பிளாக்பெரி மொபைல் போன் வரிசையில், மிகவும் ஸ்லிம்மான பிளாக் பெரி கர்வ் 8520 மொபைலை அண்மையில் ஏர்டெல் மற்றும் ஆர்.ஐ.எம். இணைந்து இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளன.

ஏர்டெல் மொபைல் சேவையி னைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த போன் ரூ. 15,990 என்ற விலையில் கிடைக்கிறது. மெசேஜ் அனுப்பி வாங்குவதில் புதியதொரு திருப்பத்தை ஆர்.ஐ.எம். நிறுவனம் பிளாக்பெரியில் உண்டாக்கியது.

இப்போது அனைவரும் வாங்கும் விலையில் ஏர்டெல் பயனாளர்களுக்கு இந்த போனைத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறது என்று ஏர்டெல் அதிகாரி ரகுநாத் இதனை அறிமுகப்படுத்தி குறிப்பிட்டார். இளம் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் தகவல் பரிமாற்றத்தை எப்போதும் செயல்படுத்தும் அனைவருக்கும் இந்த போன் கட்டுப்படியான விலையில் உதவிடும் சாதனமாக இருக்கும் என்றும் கூறினார்.

320 x 240 பிக்ஸெல் ரெசல்யூசனில் 2.46 அங்குல டி.எப்.டி. டச் ஸ்கிரீன், 13.9 மிமீ தடிமன், 106 கிராம் எடை, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் வை–பி, டச் சென்சிடிவ் ஆப்டிகல் பேட், மீடியாவிற்கென தனி கீகள், 256 எம்பி பிளாஷ் மெமரி (16 மற்றும் 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு) 2 மெகா பிக்ஸெல் கேமரா, புளுடூத், ஸ்டீரியோ ஹெட் செட் ஜாக், DivX மற்றும் XviD வீடியோ பார்மட் சப்போர்ட், வாய்ஸ் டயலிங் ஆகிய வசதிகளை இந்த போன் கொண்டுள்ளது.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ‘BB’என டைப் செய்து 543210 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பித் தெரிந்து கொள்ளலாம். ஏர்டெல் நிறுவன விற்பனை மையங் கள் மற்றும் அதிகார பூர்வ கடைகளில் இந்த போனைப் பெறலாம். இதன் விலை ரூ.15,990.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails