மோட்டரோலாவின் 7 செல்போன்கள்

செல்போன் தயாரிப்பில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள மோட்டரோலா நிறுவனம் இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் 7 புதிய செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

3.1 பிக்ஸல் கேமராவுடன் கூடிய ஸ்லீக் ஸ்லைடர் இஸட் எண் 300 மற்றும் 6 மோடோயுவா டபிள்யூ எக்ஸ் ஜெனரேஷன் செல்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் எஃப்எம் வானொலியுடன் கூடிய கேண்டிபார் ஹாண்ட் செட் வசதி மற்றும் கேமரா ஷேரிங் வசதி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்ட செல்போன்களும் அடங்கும். தொலைபேசியுடன் கேமராவும் இருப்பதால் மனதில் பதியும் காட்சிகளை படமெடுத்துக் கொள்ள முடியும்.

ஜூம் வசதி, எடிட்டிங் வசதி ஆகியன இதில் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரம் தொடர்ந்து பேசலாம், 700 குறுஞ்செய்திகளை (எஸ்எம்எஸ்) அனுப்பலாம்.

மேலும் இண்டர்நெட் பிரவுஸ் செய்யும் வசதியும் சில ரக செல்போனில் உள்ளது. இசைத்தொகுப்பை பதிவு செய்யும் புளுடூத் வசதியும் இதில் உள்ளன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails