லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
உலகின் முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே.
இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன் தரப்பட்டுள்ளது.
புளுடூத், வை–பி, ஏ.ஜி.பி.எஸ். (AGPS)தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன.3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில் நுட்பம் இயங்குகின்றன. வை–பி, புளுடூத் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
உள்நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.1350 mAh பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசிட வழி தருகிறது.
இந்த போனின் தனிச் சிறப்பாக இதன் மூன்று ஹோம் ஸ்கிரீனைக் குறிப்பிடலாம். இதனால் பயன்படுத்தும்போது ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு விட்ஜெட்டுகளை அமைக்கலாம். இதன் வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் மிக அருமையான மல்ட்டிமீடியா அனுபவத்தினைத் தருகிறது.
வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உள்ள இந்த போன் ஸ்டைலான வளைவுகளுடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.24,900. இது சராசரி இந்திய விலையைக் காட்டிலும் கூடுதல் என்பதால், பல சலுகைத் திட்டங்களை எதிர்பார்க்கலாம்
0 comments:
Post a Comment