கமாண்ட் ப்ராம்ப்ட்டில் தேடல்

விண்டோஸ் வழங்கும் பைல் தேடல் வசதியை நாம் அனைவரும் அறிவோம். இந்த வசதி டாஸ் கமாண்ட் ப்ராம்ப்ட் கட்டளை மூலமாகவும் நாம் பெறலாம் என்பது பலருக்குத் தெரியாது. இதனை எப்படிப் பெறலாம் என்று பார்க்கலாம்.

ஸ்டார்ட் சென்று ரன் பாக்ஸில் cmd என டைப் செய்து கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோவினைப் பெறவும். அங்கு சி டிரைவ் எழுத்துடன், கர்சர் துடித்துக் கொண்டிருப்பதனைக் காணலாம். இதில் எங்கேணும் ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.

இப்போது கிடைக்கும் மெனுவில்Find தேர்ந்தெடுங்கள். இப்போது கட்டம் கிடைக்கும். அதில் மேலும் சில ஆப்ஷன்கள் கிடைக்கும். அதனை உங்கள் இலக்குப்படி அமைத்து என்ன பைல் தேட வேண்டுமோ, அதனை டைப் செய்து கிளிக் செய்திடவும்.

ஆஹா! நீங்கள் தேடிய பைலின் பட்டியல் எங்கு உள்ளது என்ற தகவல் கிடைக்கும். அட! இப்படிக் கூட உள்ளதா!! என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்.


நோ டு ஆல்

பல பைல்களை மொத்தமாக இயக்கும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைத்திருக்கும். எடுத்துக் காட்டாக, போல்டர் ஒன்றில் உள்ள அனைத்து பைல்களையும் டெலீட் செய்திடக் கட்டளை கொடுத்திருப்பீர்கள். அப்போது ஏதேனும் ஒரு பைலைக் காட்டி இதனை அழிக்கவா என்று ஒரு கட்டம் கேள்வி கேட்கும்.

பதில் தரக் கொடுக்கப்படும் ஆப்ஷன்களில் "Yes to All" தரப்பட்டிருக்கும். அனைத்திற்கும் ஒரே மாதிரியான செயலை மேற்கொள்ள வேண்டும் என்றால் இதனை அழுத்தலாம். வேண்டாம் என்றால் என்ன செய்வது? அங்கு "No to All" இருக்காது.

அப்படியானால், ஒவ்வொரு பைலுக்கும் No அழுத்த வேண்டுமா? அட! ஆமாம்!! இத்தனை நாளா இதைக் கவனிக்கலையே என்று எண்ணுகிறீர்களா? கவலைப் பட வேண்டாம். உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்கிறேன். "No to All"எனப் பதிலளிக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்தியவாறுNo என்பதனை அழுத்துங்கள்.

உங்களுக்கு"No to All" கிடைக்கும். எவ்வளவு எளிது பார்த்தீர்கள? ஆனால், கவனம். இதனை அழுத்தும் முன் அத்தனைக்கும் நோ கொடுக்கலாமா என்பதனை நன்றாக முடிவு செய்து அழுத்தவும்.


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails