3000 குரோம் எக்ஸ்டன்ஷன்

பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பைப் போல, குரோம் பிரவுசருக்கு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் கள் பல இணையத்தில் கிடைக்கின்றன.

குரோம் எக்ஸ்டன்ஷன் கேலரியில் இவற்றைக் காணலாம். வரத் தொடங்கி சில மாதங்களில் இவற்றின் எண்ணிக்கை 3000 ஐத் தாண்டியுள்ளது.

இது ஒரு சாதனை என்றாலும், இவை வகைப்படுத்தப்படாமல் இருப்பது சிக்கலாக உள்ளது. நாம் குறிப்பிட்ட ஒரு நோக்கத்தோடு, இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தேடிக் கண்டறிய முடிவதில்லை.

மேலும் இவை பிரவுசருக்கான தீம்களுடன் கலந்து இருப்பது, தேடிப் பெறுவதனை இன்னும் சிக்கலாக்குகிறது.

தேடலுக்குப் பெயர் பெற்ற இஞ்சினைத் தந்துள்ள கூகுள் நிறுவனத்தின் புரோகிராம்கள் இவ்வாறு இருப்பது, அதன் பெயரைக் கெடுப்பதாக உள்ளது. விரைவில் கூகுள் இதனைச் சரி செய்திடும் என எதிர்பார்க்கலாம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails