Thursday, March 18, 2010

100 நாளில் 10 லட்சம் மொபைல்

டச் ஸ்கிரீன் மொபைல் போன்கள், மார்க்கட்டில் புயல்வேகத்தில் விற்பனையாகி வருகின்றன. எல்.ஜி. மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மக்களின் விருப்பம் அறிந்து மத்திய விலையில் இவற்றைக் கொண்டு சேர்த்து வருகின்றன.

அவ்வகையில் எல்.ஜி. நிறுவனத்தின் ஜி.டி.510 பாப் போன் அண்மையில் மெகா சாதனை புரிந்துள்ளது. அறிமுகமாகி நூறே நாட்களில் இதன் விற்பனை 10 லட்சம் எண்ணிக்கையைத் தாண்டி உள்ளது.

சாம்சங் கார்பி மற்றும் எல்.ஜி.யின் குக்கி போன்களைப் போல இந்த எல்.ஜி. ஜி.டி. 510ம் மிக வேகமாக அதிகமான எண்ணிக்கையில் வாடிக்கையாளர் களைச் சென்றடைந் துள்ளது.

இது ஒரு மத்திய நிலையில் விலையிடப்பட்டுள்ள டச் ஸ்கிரீன் போன். 3 மெகா பிக்ஸெல் கேமராவுடன் பளிச் என்றWQVGA திரையுடன் கூடியது. மிக அபூர்வமாக இதில் சூரிய ஒளி சார்ஜர் தரப்பட்டுள்ளது. இதன் உள் நினைவகம் 8 ஜிபி.

இதனால் குதூகலமாக மல்ட்டி மீடியா அம்சங்களை ரசிக்க, அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள், படங்கள் மற்றும் திரைப்படங்களை பதிந்து வைக்கலாம். மக்களிடம் இதற்குள்ள வரவேற்பினால், எல்.ஜி. மேலும் இரு வண்ணங்களில் இந்த போனைத் தர இருக்கிறது.

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...