இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதன் மூலம் முக்கிய நகரங்களில் இருக்கும் வணிக வளாகங்களின் மாத வருமானம் ரூ.80 முதல் 90 கோடியாக உள்ளது.
ஐ.பி.எல்., போட்டிகளால் சினிமாத்துறை பெரும் சரிவை சந்தித்து வருவதாக சினிமாத்துறையினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெரிவித்த பிவிஆர் சினிமாஸ் தலைவர் பிரமோத் அரோரா, ஐ.பி.எல்., போட்டிகள் நடைபெற்று வருவதால் சமீபத்தில் எந்தவொரு இந்திப் படத்திற்கும் டிக்கெட் பெருமளவில் விற்பனையாகவில்லை எனவும், அதனால் பெரும்பாலான படங்கள் ஐ.பி.எல்., போட்டிகள் முடிந்த பிறகே வெளியிடப்பட உள்ளன எனவும், அடுத்த 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து படங்களையும் தொடர்ந்து திரையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேசமயம் வணிக வளாக உரிமையாளர்கள், ஐ.பி.எல்., போட்டிகள் டிக்கெட் விற்பனையை 15-20 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஐ.பி.எல்., போட்டிகளின் துவக்க நாளில் மட்டும் 25 சதவீதம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தேர்வு நேரம் ஆதலால் தற்போது குறைந்துள்ளதாகவும், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் போது டிக்கெட் விற்பனை பெருமளவு அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது வணிக வளாகங்களின் வருமானம் ஒரு மாதத்திற்கு ரூ.80 முதல் 90 கோடி ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப் நிறுவனம் இந்த ஆண்டு ஐ.பி.எல்., போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. ஐ.பி.எல்., போட்டிகளால் யூடியூட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மார்ச் 12ம் தேதி 0.88 மில்லியனாக இருந்து தற்போது 21.06 மில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment