இன்டர்நெட் உலா வர உதவிடும் பிரவுசர்களில் முதலில் மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வந்த பிரவுசர் நெட்ஸ்கேப் கம்யூனிகேடர் என்னும் இன்டர்நெட் பிரவுசராகும்.
ஆனால் 1990 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் நெட்ஸ்கேப் இருந்த இடத்தை எடுத்துக் கொண்டது. அதன்பின் வந்த பிரவுசர்களினால் நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையை விட்டே ஏறத்தாழ காணமல் போன அளவிற்கு மறைந்தது.
நெட்ஸ்கேப் நிறுவனத்தை உண்டாக்கிய மார்க் ஆண்ட்ரிசன் தற்போது புதிய பிரவுசர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில், புதிய நிறுவனமான ராக்மெல்ட் (RockMelt) என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்து செயல்பட்டு வருகிறார்.
மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பை எதிர்த்து பயர்பாக்ஸ் பெற்று வரும் வெற்றியே புதிய முயற்சிக்குக் காரணம் என்று இந்த துறையில் இருப்பவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராக்மெல்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய பிரவுசர் முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் புதியதொரு அனுபவத்தினை அளிக்கும் என்று ஆண்ட்ரீசன் குறிப்பிட்டுள்ளார். இன்டர்நெட் தளங்கள் வேகமாக வளர்ந்த அளவிற்கு அவற்றிற்கான பிரவுசர் வளர்ந்து, மக்களுக்கு உதவவில்லை என்றும், புதியதாக உருவாகும் பிரவுசர் இந்த குறையினைத் தீர்க்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment